districts

img

பேருந்தின் படிக்கட்டில் நிற்கக்கூடாது என்ற நடத்துநருடன் மாணவர்கள் வாக்குவாதம்- தாக்குதல்

மதுரை, டிச.22-  மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து மேலூர் செல்வதற்கு புதனன்று காலை பயணிகளுடன் அரசு பேருந்து புறப்பட்டது. அப்போது, மாண வர்கள் சிலர் படிக்கட்டில் தொங்கி யவாறு பயணம் செய்து வந்துள் ளனர்.  நடத்துநர் மாணவர்களை உள்ளே வர பலமுறை கூறி யுள்ளார். ஆனால், மாணவர்கள் பேருந்தின் உள்ளே வருவதற்கு மறுத்ததால், நடத்துநர் மற்றும் மாணவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.  மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு பேருந்து வந்தவுடன் மாணவர்கள் போக்கு வரத்து ஊழியர்களை தாக்கி யுள்ளனர். இதனைத் தொடர்ந்து போக்குவரத்து ஊழியர்கள் தங்களது பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட னர்.  உடனடியாக சம்பவ இடத் திற்கு வந்த காவல்துறையினர், நடத்துநர் மற்றும் ஓட்டுநர்களு டன் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட  மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரி வித்தனர். 

மாணவர்களுக்காக அதிக பேருந்துகளை இயக்கிடுக

இதுகுறித்து போக்குவரத்து தொழிலாளர்கள் கூறுகையில், சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு, அனைத்து போக்குவரத்து கழகத்திற்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.   இதில், அரசு பேருந்து படிக்கட்டுகளில் பள்ளி, கல்லூரி  மாணவர்கள் ஆபத்தான முறை யில் பயணம் செய்தால் அந்த பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கி றது.   இந்த அறிவிப்பாணை மாண வர்கள் மத்தியில் தவறான எண் ணத்தை உருவாக்கி வருகிறது. இது தற்போது போக்குவரத்து ஊழியர்கள் மாணவர்களுக்கான பிரச்சனையாக மாறி வருகிறது.  எனவே மாணவர்கள் படி யில் நின்று பயணம் செய்வதை தவிர்ப்பதற்கு அரசு உரிய வழி காட்டு முறைகளை பின்பற்ற வேண்டும். பள்ளி மற்றும் கல் லூரி நிர்வாகங்களுக்கு மாண வர்கள் பாதுகாப்பான பய ணத்தை மேற்கொள்ளவும் விபத்து கள் குறித்த விழிப்புணர்வுகளை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.  அதேபோல் பள்ளி, கல்லூரி களுக்கு செல்லும் மாணவர் களுக்கு அரசு போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தரும் விதத்தில் அதிகப்படியான பேருந்து களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பேருந்து கள் அனைத்திற்கும் கதவுகள் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.