திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் விளையாட்டு விழா நடந்தது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் லதா பூரணம் தலைமை வகித்தார். பொருளியல்துறை உதவிப் பேராசிரியரும், விளையாட்டுத்துறை பொறுப்பாளருமான லட்சுமி வரவேற்றார். நிலக்கோட்டை காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் முருகன், இந்திய கபடி அணி முன்னாள் பயிற்சியாளர் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.