districts

சிப்காட் பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

தூத்துக்குடி, ஜூன் 27- தூத்துக்குடியில் சர்வ தேச குறு, சிறு, நடுத்தர நிறுவ னங்கள் தின விழாவினை முன்னிட்டு சிறப்பு மருத்துவ  முகாமினை, மாவட்ட ஆட்சி யர் செந்தில்ராஜ் துவக்கி வைத்து பார்வையிட்டார். உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் சர்வதேச தின விழா ஜுன் 27 அன்று கொண்டாடப்படுகிறது.  தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம், சிப்காட் திட்ட அலுவலகம் மற்றும் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை ஆகிய துறைகள் இணைந்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்க ளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் சிப்காட் திட்ட அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இம்முகாமினை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் துவக்கி வைத்தார். சிப்காட் வளாகத்தில் உள்ள 70 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் இம்முகாமில் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய் யப்பட்டிருந்தது. இம்முகா மில் கலந்து கொண்ட அனை வருக்கும் கண் பரிசோதனை, இரத்த அழுத்தம், சர்க்கரை  அளவு ஆகியவை பரிசோ தனை செய்யப்பட்டது. மேலும் பொது மருத்துவம், கண், தோல், காது, மூக்கு மற்றும் தொண்டை ஆகிய பிரிவு சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை மற்றும் ஆலோச னைகள் வழங்கினர். ஆரம்ப நிலை பரிசோத னையில் குறைபாடுகள் கண்டறியப் பட்டவர்களுக்கு தீவிர பரிசோதனைகள் செய் யப்பட்டு அறிக்கைகளும், ஆலோசனைகளும் வழங்கப் பட்டன. இம்முகாமில்மாவட்ட தொழில் மைய பொது மேலா ளர் அ.ஸ்வர்ணலதா மற்றும் சிப்காட் திட்ட அலுவலர் லியோவாஸ், மாவட்ட சுகா தார பணிகள் துணை இயக்கு நர் பொற்செல்வன், மாநகர நல அலுவலர் அருண், தூத் துக்குடி கோட்டாட்சியர், தூத்துக்குடி வட்டாட்சியர், சிப்காட் தொழில் நிறுவ னங்களின் சங்கத் தலைவர் ஜோ.பிரகாஷ் மற்றும் தர்ம ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

;