districts

img

மதுரை மாவட்டத்தில் ஆறாம் ஆண்டு கல்விக் கடன் முகாம்

மதுரை, ஆக.29-  மதுரை மாவட்ட நிர்வாகம், வங்கி நிர்வாகம் மற்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் இணைந்து மாவட்ட அளவிலான மாபெரும் கல்வி கடன் முகாம் ஆகஸ்ட் 29 வியாழனன்று மதுரை டோக் பெருமாட்டி கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா  தலைமை வகித்தார். இம்முகாமில் வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகி யோர் மாணவர்களுக்கான கல்விக்கடன் காசோலையை வழங்கினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலு வலர் ர.சக்திவேல், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பிரசாந்த் துக்காராம் நாயக், டோக் பெருமாட்டி கல்லூரி முதல்வர் முனைவர் பியூலா ஜெயஸ்ரீ உட்பட பல்வேறு முன்னணி வங்கிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசி னார். அப்போது அவர் கூறியதாவது:

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் மனதுக்கு நெருக்க மான ஒரு நிகழ்வாக இந்த கல்விக் கடன் திருவிழாவை ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நடத்திக் கொண்டிருக்கின்றோம். இது  ஆறாவது ஆண்டு கல்வி கடன் திருவிழா.  ஒவ்வொரு ஆண்டும் ரூ.100 கோடி தாண்டி கல்விக்கடன் வழங்கிக் கொண்டி ருக்கின்றோம். இது இந்தியாவிலேயே ஒரு மிகப்பெரிய சாதனை. வேறு மாவட்டங்களில் வழங்கப்பட்ட கல்வி கடனை விட இது மிக அதிகம். 

அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் ஊக்கப்படுத்தி கல்வி கடனை பெற்று கொடுக்க சொல்கிற அமைச்சர் பி.மூர்த்திக்கு நன்றி. தொடர்ந்து கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த கல்விக் கடன் முகாமில் அவர் கலந்து கொண்டு வருகிறார். ஐந்து ஆண்டுகளுக்கு முன் எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் போது இந்த முகாமில் கலந்து கொண்டு நாம் செய்வதிலேயே மிகவும் முக்கியமான பணி என்றார். ஏனென்றால் சாமானிய மக்கள் கல்விக்கடன் பெற எவ்வளவு சிரமப்படுவார்கள் என்று கூறினார். 

மேலும் கடந்த இரண்டு ஆண்டு களாக மாவட்ட ஆட்சியர் இந்த நிகழ்வில் மிகவும் கவனம் செலுத்தி வருகிறார். அதேபோல் வங்கி அதிகாரிகள் அவர்களுக்கு எவ்வளவு நெருக்கடி வந்தாலும் அதையும் தாண்டி இந்த கல்விக் கடனை வழங்கி வருகிறார்கள். 

எவ்வளவோ பெரிய கடன்களை யெல்லாம் தள்ளுபடி செய்கிறீர்கள். இந்தக் கல்வி கடனை தள்ளுபடி செய்ய வேண்டியது தானே என்று நாடாளுமன்றத்தில் கூறி வருகிறேன். அதே போல் மாணவர்கள் கல்லூரி படிப்பிற்கு பெறும் கடனுக்கு அவர்கள் படிப்பு முடியும் வரை வட்டி போடக்கூடாது என்பதை தெரிவித்து வருகிறேன். நாடாளுமன்றத்தில் கல்விக் குழுவில் நான் இருக்கிறேன். அனைத்து மாநி லங்களுக்கும் சென்று வருகிறேன். அந்த மாநிலங்களில் எல்லாம் எவ்வளவு கல்விக்கடன் கொடுக்கப்படுகிறது என்பதை ஆய்வு செய்து வருகிறோம். அப்படி ஆய்வு செய்யும் போது மிக அதிக மாக கல்வி கடன் கொடுக்க முடியும் என்கிற மாநிலமாக மகாராஷ்டிராவிற்கு அடுத்து தமிழகம் உள்ளது. அதற்கு மதுரை ஒரு முன்னுதாரணமாக உள்ளது. ஐந்து ஆண்டுகளில் ரூ.500 கோடி என்பதை போல அடுத்த ஆண்டு களில் இதை இரண்டு மடங்காக மாற்ற வேண்டும். எனவே ஆயிரம் கோடி என்ற இலக்கை நோக்கி தான் நாங்கள் அனைவரும் இந்த பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம். 

கல்விக்கு கொடுக்கும் கடன் என்பது முதலீடு அல்ல; அது மனித வளர்ச்சிக்கான ஒரு குறியீடு என மாவட்ட ஆட்சியர் கூறினார். மதுரை மாவட்டத்தில் உயர்கல்விக்கு செல்ல முடியாத மாண வன் என்று ஒருவர் கூட இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் இங்கு அனை வரும் பணியாற்றிக் கொண்டிருக்கின் றோம். இந்த ஆண்டு வைக்கப்பட்டுள்ள இலக்கை அனைத்து வங்கிகளும் செயல்படுத்துவார்கள். அந்த வகையில் மாவட்ட நிர்வாகமும் ஒவ்வொரு ஆலோ சனை கூட்டத்திலும் அதை செய்வார்கள் என்பதையும் இந்த நேரத்தில் தெரி வித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து மாணவர்களுக்கு வங்கி கள் மூலம் பெறப்பட்ட கல்விக் கடனுக் கான காசோலைகளை அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர் மற்றும் வங்கி அதிகாரிகள் வழங்கினர். 

இதில் கனரா வங்கி 38 நபர்களுக்கு ரூ.4 கோடியே 58 லட்சமும்; ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 27 நபர்களுக்கு ரூ.4 கோடியே 25 லட்சமும்; யூனியன் பாங்க் ஆப் இந்தியா 11 நபர்களுக்கு ரூ.3 கோடியே 82 லட்சமும்; இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 19 நபர்களுக்கு ரூ.3 கோடியே 37 லட்சமும்; இந்தியன் வங்கி 37 நபர்களுக்கு ரூ.2 கோடியே 30 லட்சம் என மொத்தம் 16 வங்கிகள் மூலம் 152 மாணவர்களுக்கு ரூ.21 கோடியே 92 லட்சத்து 18 ஆயிரம் கல்விக் கடனாக வழங்கப்பட்டது.