மதுரை, டிச.5- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை புறநகர் மாவட்டம் திருப்ப ரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட எஸ்.ஆர்.வி. நகர் கிளையின் முது பெரும் தோழரும், அரசு போக்குவரத்து கழகம் சிஐடியு தொழிற்சங்க தலைவ ராகவும் செயல்பட்ட தோழர் எஸ். கரு ணைராகவன் (75) அவர்கள் திங்க ளன்று காலமானார். அவரது மறைவு செய்தியறிந்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட செயலாளர் சி. ராம கிருஷ்ணன், திருப்பரங்குன்றம் தாலுகாச் செயலாளர் எம். ஜெயக்குமார், மாவட்டக்குழு உறுப்பினர்கள் வி.முத்து ராஜ், மாமன்ற உறுப்பினர் என்.விஜயா, தொழிற்சங்க தலைவர்கள் நிர்வாகிகள், தோழர்கள் உட்பட பலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.