districts

img

தீக்கதிர் அலுவலகத்தில் சீத்தாராம் யெச்சூரி

மதுரை, ஏப்.13- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச் செயலாளர் சீத்தாராம்  யெச்சூரி சனிக்கிழமை காலை மதுரையில் உள்ள தீக்கதிர் தலைமை  அலுவலகத்திற்கு வருகை தந்தார். 

திண்டுக்கல், மதுரை நாடாளு மன்றத் தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள வருகை தந்துள்ள  சீத்தாராம் யெச்சூரி, திண்டுக்கல் லில் இருந்து சனிக்கிழமை காலை கார் மூலம் மதுரை வந்தார். அப்  போது மதுரை பைபாஸ் சாலையில்  அமைந்துள்ள தீக்கதிர் அலுவல கத்திற்கு வருகை தந்த அவருக்கு தீக்கதிர் ஊழியர்கள் சார்பில் வர வேற்பு அளிக்கப்பட்டது.

தீக்கதிர் ஆசிரியர் எஸ்.பி. ராஜேந்திரன் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில் செய்தி ஆசி ரியர் ப.முருகன் சீத்தாராம் யெச்சூ ரிக்கு சால்வை அணிவித்தார். கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஏ.ஆறுமுகநயினார், மாநிலக்குழு உறுப்பினர் இரா.சுதிர், பொது மேலா ளர் ஜோ.ராஜ்மோகன், வைகை  பிரிண்டர்ஸ் மேலாளர் க.பாண்டிய ராஜன் உள்ளிட்ட ஊழியர்கள் உற்  சாக வரவேற்பு அளித்தனர்.

தீக்கதிர் அலுவலகத்தில் அச்சு இயந்திரம் உள்ளிட்டவற்றை பார் வையிட்ட சீத்தாராம் யெச்சூரி, பத்தி ரிகை பணி மேலும் சிறக்க ஊழி யர்களுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்தார். 

தீக்கதிர் வளாகத்தில் மதிமுக மூத்த தலைவர் எஸ்.மகபூப்ஜானும் சீத்தாராம் யெச்சூரிக்கு சால்வை அணிவித்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க  மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக் தலைமையிலான சமூக ஊடக குழு வினரும் யெச்சூரிக்கு வரவேற்பு அளித்தனர்.