districts

img

அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுடன் சு.வெங்கடேசன் சந்திப்பு

திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்  சு.வெங்கடேசன், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறைஅமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை சனிக்கிழமையன்று அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி ஆதரவு திரட்டினார். தொடர்ந்து அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு பொன்னாடை போர்த்தி ஆதரவு தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் இரா.விஜயராஜன், மாவட்டச் செயலாளர் மா.கணேசன், துணை மேயர் தி.நாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.