சாத்தூர், ஜூலை 17- பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்கள் சென்று வரும் நேரங்களில் கூடுதலான அர சுப் பேருந்தகளை இயக்க வேண்டும். அரசுப் பள்ளி களை பாதுகாத்திட வேண் டும். நகராட்சி அரசு மேல் நிலைப் பள்ளியில் உள்ள மைதானம் மற்றும் கழிப் பறைகளை சீரமைக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தின் தாலுகா மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சாத்தூரில் நடைபெற்ற மாநாட்டிற்கு வட்டத் தலை வர் ராகுல் தலைமை தாங்கி னார். மாவட்டக்குழு உறுப்பி னர் பாலமுருகன் வரவேற் றார். வட்டச் செயலாளர் பால் பாண்டியன் வேலை அறிக் கையை சமர்ப்பித்தார். முடி வில் மாவட்ட செயலாளர் கிஷோர் நந்தகுமார் சிறப்பு ரையாற்றினார். புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. வட்டத் தலைவராக பாலமுருகன், செயலாளராக ராகுல், துணைத் தலைவர்களாக அருண், வெண்மணி, துணைச் செயலாளர்களாக யாக்கோப், மோகனா ஆகி யோரைக் கொண்ட தாலுகா குழு தேர்வு செய்யப்பட்டது.