மானாமதுரை, ஏப்.20- சாலை பணியாளர் சங்க சிவகங்கை மாவட்ட பேரவை கூட்டம் மானாமதுரையில் மாவட்டத் தலைவர் மாரி தலை மையில் நடைபெற்றது. இதில், மாவட்டச் செயலாளர் சின்னப் பன், மாவட்டத் துணைத் தலை வர் பாலசுப்பிரமணியன், மாநி லச் செயற்குழு உறுப்பினர் சிவக்குமார், மாநிலப் பொரு ளாளர் தமிழ் மற்றும் தோழ மைச்சங்க நிர்வாகிகள் கண்ண தாசன், பாண்டி, முருகேசன், லோகநாதன், மூவேந்தன், ஜெய பிரகாஷ் உள்ளிட்டோர் பேசினர். பேரவையில் சாலைப் பணி யாளர்களின் 41 மாத கால பணிநீக்க காலத்தை பணிக்கால மாக முறைப்படுத்த வேண்டும், சாலைப் பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வி திறன் பெற ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும் நெடுஞ்சாலைப் பராமரிப்பு பணி யை தனியாருக்கு வழங்குவதை கைவிட்டு அரசு ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.