districts

img

வருவாய்த்துறை அலுவலர் சங்க வைரவிழா

தேனி, ஆக.4-  தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் வைரவிழாவை முன்னிட்டு உத்தமபாளையத்தில் நடைபெற்ற கொடி யேற்று நிகழ்வில் சங்க முன்னோடி தலை வர்கள் கவுரவிக்கப்பட்டனர் .  தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் தோற்றுவிக்கப்பட்டு 60 ஆண்டுகள் முடிவடைவதை முன்னிட்டு வைரவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக கொடியேற்று விழா உத்தமபாளையம் வட் டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடை பெற்றது. இக் கொடியேற்று நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தேனி மாவட்ட தலைவர் ராம லிங்கம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கண்ணன் முன்னிலை வகித் தார். மாவட்ட இணைச் செயலாளர் ஜாகிர், மாவட்ட துணைத் தலைவர் சுரேந்திரன் மற்றும் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  நிகழ்ச்சியில் சங்கத்தின் முன்னாள் நிர் வாகிகள் ராஜேஸ்வரன் துணை ஆட்சியர் (ஓய்வு), பரமராஜ் துணை ஆட்சியர் (ஓய்வு), பாலசுப்பிரமணி துணை ஆட்சியர் (ஓய்வு), வடிவேல் வட்டாட்சியர் (ஓய்வு), காந்தி துணை வட்டாட்சியர் (ஓய்வு )ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.