இராஜபாளையம், பிப்.17- இராஜபாளையம் நகராட்சி செட்டியார்பட்டி, சேத்தூர் பேரூராட்சிகளில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர்கள் மற்றும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வியாழனன்று வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பு மற்றும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். செட்டியார்பட்டி 1-வது வார்டில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் எஸ்.மருது உள் ளிட்ட திமுக வேட்பாளர்கள், சேத்தூர் பேரூராட்சி வார்டில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் திருமலைக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். பிரச்சாரத்தில், சிபிஎம் மாவட்ட செயலாளர் கே.அர்ஜூ னன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஏ.குருசாமி, மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.ராமர், ஒன்றியச் செயலாளர் சந்தனகுமார், திமுக இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் தங்கபாண்டி யன், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார், முன்னாள் எம்எல்ஏ வி.பி.ராஜன், பேரூர் கழக செயலாளர் இளங்கோ, சிபிஎம் முன்னாள் ஒன்றியச் செயலாளர் தங்க வேல் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட னர். இராஜபாளையம் நகராட்சி 18வது வார்டில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் எம்.செந் தமிழ்ச்செல்வனை ஆதரித்து வடக்கு மலையடிப்பட்டி பகு தியில் அமைச்சர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து இராஜ பாளையம் நகரில் நான்கு இடங்க ளில் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினருக்கு வாக்குச் சேக ரித்தார்.