districts

img

மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்

 திருநெல்வேலி, ஜூலை 3- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் 4வது மாவட்ட மாநாடு பாளையங்கோட்டை அருண்ஸ் மஹாலில் நடைபெற்றது. சனிக்கிழமை நடைபெற்ற முதல் நாள் மாநாடு பேரணியுடன் துவங்கியது. பேரணிக்கு மாவட்ட துணைத் தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். பேரணி பாளையங்கோட்டை மத்திய நூல கத்திலிருந்து புறப்பட்டு பாளை யங்கோட்டை அருண்ஸ் மஹால்  வந்தடைந்தது. அதனை தொடர்ந்து  பொது மாநாடு நடைபெற்றது. பொது மாநாட்டிற்கு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்னாள் முதல்வர் டாக்டர்.ராம குரு தலைமை தாங்கினார், மாவட்ட துணை தலைவர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் குமாரசாமி வரவேற்று  பேசினார். மாநில செயலாளர் வில்  சன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். 

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், முன்  னாள் எம்எல்ஏ ஆர்.கிருஷ்ணன், சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட தலைவர் வீ.பழனி, மாதர் சங்கம் மாவட்ட தலைவர் கு.பழனி,  55வது வார்டு சி.பி.எம் மாமன்ற உறுப்பினர் முத்து சுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். 2ம் நாள் மாநாட்டிற்கு சங்க மாவட்ட தலைவர் செல்வசுந்தரி தலைமை  தாங்கினார். மாவட்ட துணை தலை வர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத்தலை வர் மரிய கொரட்டி அஞ்சல் தீர்மா னம் வாசித்தார். மாவட்ட துணைத்தலைவர் காசி வரவேற்று  பேசினார். மாநில செயலாளர் வில சன், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்  னாள் முதல்வர் டாக்டர் ராமகுரு,  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில குழு உறுப்பினர்  பூ.கோபாலன், காப்பீட்டு கழக ஊழி யர் சங்க கோட்ட பொதுச் செய லாளர் செ.முத்துக்குமாரசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  மாநில குழு உறுப்பினர் பி.கற்பகம்,  சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர். மோகன் ஆகியோர் வாழ்த்தி பேசி னர். வரவு செலவு மற்றும் வேலை அறிக்கைகளை மாவட்ட செயலா ளர் குமார்சாமி மற்றும் மாவட்ட பொருளாளர் நம்பிராஜன் ஆகி யோர் சமர்ப்பித்து பேசினர். மாவட்டத் தலைவராக எஸ்.பெருமாள், மாவட்ட செயலாளராக  முத்து மணிகண்டன், மாவட்ட பொருளாளராக சுமா மற்றும் 4 துணைத் தலைவர்கள், 4 துணை  செயலாளர்கள், கௌரவ தலைவ ராக டாக்டர் ராமகுரு, சங்க ஆலோ சகராக பி.தியாகராஜன் உட்பட 25 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.

மாநாட்டில் தமிழக அரசு  அனைத்து வகை மாற்றுத்திறனாளி களுக்கும் மாதாந்திர உதவி தொகையை ரூ.5ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், ஒன்றிய அரசு மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்க ளுக்கு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும், தமிழக அரசு  மாற்றுத்திறனாளிகள் அனைவருக்  கும் 6மாத காலத்திற்குள் அடை யாள அட்டை வழங்க வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தில் மாற்  றுத்திறனாளிகளுக்கு வேலை நாட்கள் முழுவதும் வேலை வழங்க  வேண்டும், 80 சதவீதத்துக்கு மேல் கண் பார்வையற்ற வாய் பேச முடி யாத, காது கேளாத மாற்றுத் திற னாளிகளை கடும் மாற்றுத் திற னாளிகளாக தமிழக அரசு அறி வித்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க மாநில பொதுச் செயலாளர் நம்பிராஜன் நிறைவுரையாற்றி னார்.  புதிய மாவட்ட செயலாளர் முத்து மணிகண்டன் நன்றி கூறி னார்.

;