districts

img

மீண்டும் பொறுப்பேற்றார் ரத்தினவேல்

மதுரை, மே 5- மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையின் முதல்வராக மீண்டும் ரத்தின வேல் பொறுப்பேற்றுக் கொண்டார்.  அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மருத்துவ கல்லூரி மூத்த மருத்துவ மாணவர்கள் , நிர்வாகத்திற்கும் தெரியாமல் எந்த ஒரு ஒப்புதலும் இல்லா மல் சமஸ்கிருத உறுதிமொழியின் ஆங்கில மொழிபெயர்ப்பு மேடையில் படிக்கப்பட்டது. நடந்த தவறு  தொடர்பாக மருத்துவக் கல்லூரி நிர்வாகம், பேராசிரியர்கள், மாணவர்களிடம் மருத்துவக் கல்வி இயக்குநரகம் விசா ரணை நடத்தி அரசுக்கு அறிக்கை வழங்கினர். புதனன்று தமிழக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியனை இல்லத்தில் சந்தித்து நடந்த விபரங்களை நேரில் கூறி நடந்த தவறுக்கு மதுரை மருத்துவக் கல்லூரி சார்பாக வருத்தத்தை தெரிவித்தோம். இதுகுறித்து மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் முதல்வ ரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றார். தமிழக முதல்வர் என்னை மீண்டும் மருத்துவக் கல்லூரி முதல்வராக நிய மித்துள்ளார். மீண்டும் மருத்துவக் கல்லூரி முதல்வராக பொறுப் பேற்றுக் கொண்டேன். இந்த உத்தரவை வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவிக்கிறேன். எங்களின் பணியை புரிந்து ஆதரவு அளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நிதி அமைச்சர் பி.டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார்.