முதுகுளத்தூர், மார்ச் 24- இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக விஞ்ஞானத் துளிர் வாசகர் திருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அறிவியல் இயக்க மாவட்ட தலை வரும் பள்ளி தாளாளருமான அய்யாசாமி தலைமை தாங்கி னார். பள்ளி துணை முதல்வர் அனிதா முன்னிலை வகித் தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்கம் தாலுகா தலைவர் ஆசிரியர் துரைப்பாண்டியன் வாழ்த்துரை வழங்கினார். துளிர் பத்திரிகை பொறுப்பா சிரியர் பாலகிருஷ்ணன், அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் காந்தி மற்றும் பள்ளி மேலாளர் ரவிச்சந்தி ரன், ஆசிரியர்கள், மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.