districts

img

ஆக்கிரமிப்பால் தெருவில் தேங்கும் மழைநீர்: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி

மதுரை, ஏப்.13- மதுரையில் கடந்த மூன்று  தினங்களாக பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால், நகரின் பல பகுதிகளில் அதிகளவில் மழை நீர் தேங்கியுள்ளது. பல தெருக்க ளில் மழைநீர் வழிந்து செல்வ தற்கு வழியின்றி முழங்கால் அள விற்கு தண்ணீர் தேங்கி வாகனங் கள் செல்ல முடியாத அளவிற்கு பெரும் சிரமம் ஏற்பட்டது.  மேலும் கடந்த ஆண்டு இறுதி யில் பெய்த மழையின் போது பல ரும் மழைநீர் கால்வாய்களை மாநகராட்சி நிர்வாகம் சரியாக சீரமைக்க வேண்டும் வாய்க்கால் களை ஆக்கிரமித்து கட்டப்பட் டுள்ள கட்டுமானங்களை அகற்றி யும் அவற்றில் உள்ள குப்பை களை அகற்றி மழைநீர் சீராக செல்வதற்கு வழி செய்து அவற் றிற்கு மேல் மூடிகள் அமைக்க வேண்டும் என்று ஆலோசனை களை வழங்கினர். ஆனால், மாந கராட்சி நிர்வாகம் கண்டுகொண்ட தாக தெரியவில்லை.  அதேபோல்தான் கடந்த மூன்று தினங்களாக பெருமள வில் மழை பெய்தும் அந்த நீர் சென்று சேரவேண்டிய இடத் திற்கு செல்லவில்லை. இதனால் பெருமளவில் மழைநீர் தெருக் களில் தேங்கியுள்ளது. மேலும் மழைநீர் வழிந்து செல்லும் கால் வாய்கள், குளங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. இதனால் கொசுக்கள் அதிகளவில் உற் பத்தியாகி பெரும் நோய் தொற்று களையும் பொதுமக்களுக்கு ஏற் படுகிறது.  குறிப்பாக பெத்தானியாபுரம் பகுதியிலுள்ள சிந்தாமணி கால் வாய், கிருதுமால் நதி போன் றவை குப்பைகளின் ஆக்கிரமிப் பால் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.  எனவே, மதுரை மாநகராட்சி நிர்வாகம் உரிய முறையில் மழை நீர் வாய்க்கால்களை சீரமைக்க வும், மழைநீர் செல்லும் கால்வாய் களில் உள்ள குப்பைகளை அகற்றுவதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து மழை நீரை சேமிக்க வேண் டும் என்பதே குடியிருப்புவாசிகள் மற்றும் பொதுமக்களின் கருத் தாக உள்ளது. ஜெ.பொன்மாறன்