districts

img

தூத்துக்குடி மாவட்டத்தில் 6,17,104 வாக்காளர்கள் நகர்ப்புற உள்ளாட்சிக்கான பட்டியல் வெளியீடு

தூத்துக்குடி, டிச.9- தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்கா ளர் பட்டியல் வியாழனன்று காலை வெளி யிடப்பட்டது. இதன்படி தூத்துக்குடி மாநக ராட்சியில் 3,22,388 வாக்காளர்கள் உள்ள னர். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் மாநகராட்சி, நக ராட்சிகள் மற்றும் 18 பேரூராட்சிகளின் வாக் காளர் பட்டியலை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஆறு முகக்கனி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மைக்கேல், வட்டார வளர்ச்சி அலுவலர் (தேர்தல்) ராம நாதன் மற்றும் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.  தூத்துக்குடி மாநகராட்சி இதுபோல் தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள வாக்காளர் பட்டியலை மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிட்டார். இதனை அரசியல் கட்சிகள் சார்பில் முக்கிய பிர முகர்கள் பெற்று கொண்டனர். சிபிஎம் சார்பில் மாநகர் செயலாளர் தா.ராஜா, திமுக சார்பில் ஆனந்த சேகரன், காங்கிரஸ் சார்பில் முரளிதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். இதன்படி தூத்துக்குடி மாநகராட்சி யில் 157763 ஆண், 164570 பெண், 55 திரு நங்கைகள் என மொத்தம் 3,22,388 வாக்கா ளர்கள் உள்ளனர். மேலும் நகர்ப்புற உள் ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் 82 வாக் குச் சாவடிகளும், மேற்கு மண்டலத்தில் 79 வாக்குச் சாவடிகளும், கிழக்கு மண்ட லத்தில் 79, தெற்கு மண்டலத்தில் 79 என மொத்தம் 319 வாக்குச் சாவடிகள் அமைக்கப் பட உள்ளது.