districts

img

தூய்மைக் காவலர்களுக்கு சம்பளத்தை நேரடியாக ஊராட்சிகள் மூலம் வழங்குக!

திருவாரூர், மே 23 - திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி  உள்ளாட்சித்துறை ஊழியர் மற்றும் என்எம்ஆர் ஊழியர்கள் சங்கம் சார்பில் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.கோவிந்தராஜ் தலைமையிலும், மாநிலக்குழு உறுப்பினர்கள் டி.கலிய மூர்த்தி, எஸ்.காமராஜ், ஏபிடி.லோக நாயகி, கே.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சிஐடியு மாவட்டச் செய லாளர் டி.முருகையன் கோரிக்கை களை விளக்கிப் பேசினார்.  கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் ஓஎச்டி ஆபரேட்டர்களுக்கு அரசு நிர்ண யித்த ஊதியத்தையும், நிலுவைத் தொகையையும் தூய்மை காவலர்க ளுக்கும், துப்புரவு ஊழியர்களுக்கும் மாதந்தோறும் தாமதமின்றி வழங்க வேண்டும். கொரோனா மகன்கள் பணியாளர்களுக்கு தமிழக அரசு அறி வித்த நிவாரண தொகை ரூ.15 ஆயி ரத்தை உடனடியாக வழங்க வேண்டும். தூய்மை காவலர்களுக்கு சம்பளத்தை  நேரடியாக ஊராட்சிகள் மூலம் வழங்க வேண்டும். நகராட்சி துப்புரவு  ஊழியர்களுக்கு பதவி உயர்வும், ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூ.21 ஆயிர மும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  போராட்டம் நடத்தப்பட்டது.

;