தென்காசி, ஜூலை 13 அரசு நிதி உதவி பெறும் தனியார் பள்ளி சங்கத்தின் சார்பில் தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்த பள்ளிக் கல்வித் துறை அமைச் சரிடம் கோரிக்கை மனு வழங்கப் பட்டது. அரசு நிதியுதவிபெறும் தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்கத்தின் சார்பில் மாவட்ட பொருளாளர் சாமி தலைமையில்செயற்குழு உறுப்பி னர்கள் ஞானப்பிரகாசம். ஜோசப், சுந்தர் ஆகியோர் வாசுதேவநல்லூ ரில் பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியி டம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கும் உயர் கல்வியில் 7.5சதவீத இட ஒதுக் கீட்டில் வாய்ப்பளித்து உதவிடவும் மாணவிகளுக்கு உயர்கல்வியில் படிப்பவர்களுக்கு ரூ. 1000/- உத வித் தொகை வழங்கிடவும் துவக்க, நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ மாணவியருக்கும் இலவச சீருடை வழங்கிடவும் வேண்டுகி றோம். அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1991 முதல் தரம் உயர்த்தப்பட்ட (Partially Upgraded) நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி களுக்கு (ஏறத்தாழ 1000 பள்ளிகள்) தலைவர் கலைஞர் அவர்களால் 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி அரசாணை மூலம் வழங்கப்பட்ட மானியத்தை (அதாவது அரசிடம் உள்ள சரண்டர் பணியிடங்களை வழங்கினால் நிதிச்சுமை இருக் காது) வழங்கிடவும்.
மேற்படி பள்ளி களுக்கு தேர்தல் பிரச்சாரத்தின் போது தளபதி அவர்களால் வழங்கப் பட்ட வாக்குறுதியை நிறைவேற்றி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர் நலன் காத்திடவும். பழைய ஓய்வூதியத் திட்டம், மீண்டும் அமல்படுத்தப்பட வும் 100 மாணவ மாணவிகளுக்கு மேல் உள்ள அரசு உதவி பெறும் துவக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு நிரந்தர கணினி உதவியாளர் (Computer Operator) மற்றும் துப்பு ரவு பணியாளர் (Sweeper) பணி யிடங்கள் வழங்கிடவும். பள்ளியை நடத்தும் நிர்வாகிக ளுக்கு, நிர்வாக மானியம் 2சதவீதம் வழங்கிடவும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2011 க்குப் பின் கட்டப்படும் கட்டிடங்களுக்கு DTPC அனுமதி பெற வேண்டும் என்ற முந்தய அ தி மு க அரசின் ஆணை யை ரத்து செய்து, அந்தந்த நக ராட்சியோ/பஞ்சாயத்தோ / மாநக ராட்சியோ அனுமதி வழங்கிடவும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி அரசு உதவி பெறும் பள்ளிளுக்கும் கிடைத்திட வும் (அ.தி.மு.க ஆட்சியின் போது நிறுத்தப்பட்டது) அனைத்து அரசா ணைகளும் தமிழ் மொழியில் இடம் பெற ஆவன செய்திடவும் வேண்டுகி றோம் என்று கூறப்பட்டுள்ளது.