districts

img

தேர்வு எழுத வரும் மாணவர்களை குறி வைத்து பிரச்சாரத்தில் ஈடுபடும் தனியார் கல்வி நிலையங்கள்

விருதுநகர், மார்ச் 4- தடை செய்யப்பட்ட பொதுத் தேர்வு மைய வளாகம் முன்பு தனியார் கல்வி நிறுவ னத்தினர்  மாணவர்களுக்கு  துண்டறிக்கை  வழங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 பொதுத்  தேர்வு துவங்கி நடைபெற்று வருகிறது. மாணவ, மாணவிகளுக்கு தேர்வு எழுத  மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அங்கு  சென்று மாணவர்கள் தேர்வு எழுதி வரு கின்றனர். தேர்வு நடைபெறும் நேரங்களில் அப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காவல் துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடு படுத்தப்பட்டுள்ளனர். அந்நேரங்களில் பிற  மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட தேர்வு மைய வளாகத்தின் அருகே செல்ல  அனுமதி இல்லை. ஆனால், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேர்வு எழுத வரும்  மாணவ, மாணவிகளை வழி மறித்து தனி யார் கல்வி நிறுவனத்தினர் நோட்டீஸ் வழங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். இதனால், மாணவர்களின் பலர்  சங்கோசப்படும் நிலைக்கு தள்ளப்படுகின்ற னர். ஏற்கனவே, தேர்வு குறித்து ஒருவித சிறு பயத்துடன் வரும் மாணவர்களிடம் துண்டு பிரசுரங்களையும் அதில் தங்க ளது கல்வி நிறுவனத்தின் அருமை பெரு மைகளைக் கொண்ட பொய்யான தக வல்களையும் வழங்கி வருகின்றனர். இதற்கு தனியார் கல்வி நிறுவனத்தினர் அங்கு பயின்று வரும் மாணவ, மாணவி களைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனை அங்கு பணியில் உள்ள காவல் துறையினரும் வேடிக்கை பார்க்கும் நிலை  உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக் கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்கள் சமீபகாலம் செயல்பட்டு வந்துள்ளன. விளம்பரங்களைப்  பார்த்து அதில், ஏரா ளமான மாணவ, மாணவிகள் சேர்வதும் பின்பு, போராட்டங்கள் நடத்தி தங்களது சான்றிதழ்கள் மற்றும் செலுத்திய பணத் தைப் திரும்பப் பெற்றுச் செல்வதும் தொடர்  கதையாகி வருகிறது. இந்நிலையில், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேர்வு மைய வளா கங்கள் முன்பே தனியார் கல்வி நிறு வனங்கள் துண்டறிக்கைகளை மாண வர்களுக்கு வழங்கி வருகின்றன. எனவே, மாவட்ட நிர்வாகம், தேர்வு  மையங்கள் முன்பு, தனியார் கல்வி நிறு வனத்தினர் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும். அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்கள் இதில் ஈடுபடுகிறதா? என்பதையும் கண்காணிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.