districts

img

மதுரை 96 ஆவது வார்டு- பரவையில் சிபிஎம் வேட்பாளர்கள் வாக்குச் சேகரிப்பு

மதுரை, பிப்.7- மதுரை பரவை பேரூராட்சி யில் 14வது வார்டில் போட்டி யிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எஸ்.மகா லிங்கம் திங்களன்று பேங்க் காலனி, மற்றும் விரிவாக்கப் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  அப்போது அவர் வாக்கா ளர்களிடம், பரவையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்துதல், பேரூராட்சி பகு தியில் குடிநீர் வசதியை ஏற் படுத்துதல், மாணவர்களுக்கான இலவச வேலை வாய்ப்பு பயிற்சி மையம் போன்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று கூறி வாக்குச் சேகரித்தார்.  இதில், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலா, மேற்கு ஒன்றியச் செயலாளர் பி.ஜீவானந் தம், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.பாலகிருஷ்ணன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் து.ராம மூர்த்தி, பி.நாகேந்திரன், பாண்டி உட்பட பலர் கலந்து கொண்ட னர். மதுரை மாநகராட்சி 96 வது வார்டில் போட்டியிடும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பா ளர் என்.விஜயா கூட்டணி கட்சி யினருடன் 96வது வார்டுக்கு உட்பட்ட ஹார்விபட்டி பழைய 1வது, 2வது வார்டு பகுதியில் வாக்காளர்களிடம் வாக்கு சேக ரித்தார். அப்போது, ஹார்விபட்டியில் மூடப்பட்டுள்ள உயர்நிலைப் பள்ளியை அரசு ஏற்று நடத்திட, மூடப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முயற்சி யால் ஹார்விபட்டியில் மீட்கப் பட்டுள்ள அரசு நிலத்தில் சிறு வர் பூங்கா அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட வாக்களிக்குமாறு வாக்கு சேகரித்தார்.  பிரச்சாரத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் பா.ரவி, மாவட்டக் குழு  உறுப்பினர் வி.ராஜூ, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பி.ஈஸ்வரி, சி.பாண்டியன், எஸ்.எம்.பாண்டி, திமுக சார்பில் மாரியப்பன், இளங்குமரன், செந்தில், காங்கி ரஸ் வெங்கிடு, அண்ணாமலை, மதிமுக கிருஷ்ணசாமி, செல்வ ரங்கன் ஆகியோர் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர்.