districts

img

மகன் காதல் திருமணம் காலில் விழுந்து அபராதம் கட்ட மறுத்ததால் தந்தையின் சடலத்தை புதைக்க அனுமதி மறுப்பு

தேனி அருகே போலீசார் பேச்சுவார்த்தை  தேனி, மே 17- தேனி அருகே கோட்டூரில் மகன் காதல் திருமணம் செய்த நிலை யில், காலில் விழுந்து அபராதம் கட்ட மறுத்ததால் தந்தையின் சட லத்தை கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய  அனுமதி மறுத்த தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் தலையிட்டு சடலத்தை கல்லறையில் புதைத்த னர். தேனி ஒன்றியம், கோட்டூர் கிரா மத்தில் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த  சமூகத்தினர் காதல் திருமணம் செய்  தால், அந்த  நபர், அங்குள்ள தேவா லயத்திற்கு வந்து காலில் விழுந்து, சமூக நிர்வாகிகள் விதிக்கும் அப ராதத்தை செலுத்தினால் மட்டுமே  சமூகத்தில் சேர்த்துக் கொள்ளும்  வழக்கம் உள்ளது .அவ்வாறு  செய்யவில்லை என்றால் அவர்  களின் இல்லத்தை சேர்ந்தவர் களின் விழாக்கள்,இறப்பு நிகழ்ச்சி களில் சமூகத்தினர்

 கலந்து கொள்ள வும், இறந்தால்  கல்லறை தோட்டத்  தில் அடக்கம் செய்யவும் சமூக  நிர்வாகத்தினர் தடைவிதித்துள்ள னர்.   இந்நிலையில் கோட்டூரை சேர்ந்த ஜான் பீட்டர். என்பவர் செவ்வாய்க்கிழமையன்று மாலை  காலமானார். இவருக்கு நான்கு மகன்கள் உள்ளனர். இவர்கள் காவல்துறை, ராணுவம் ,பேராசிரி யர் என பணியாற்றி வருகிறார்கள்.  ஆரோன் என்ற மகன் காதல் திரு மணம் செய்ததாக கூறப்படுகிறது .ஏற்கனவே காலில் விழுந்து அப ராதம் செலுத்திய நிலையில், செவ் வாய்க்கிழமை மீண்டும் காலில்  விழுந்து அபராதம் செலுத்த வேண் டும் என சமூகத்தினர் வலியுறுத்தி யுள்ளனர். அதற்கு ஜான் பீட்டர்  குடும்பத்தினர் மறுப்பு தெரிவித் துள்ளனர். இதனால் அவர்களுக்கு அமரர் ஊர்தியை வழங்காமல், கல்லறையை பூட்டியதாக கூறப் படுகிறது .தகவலறிந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் ஒருவர், ஊர்  வழக்கப்படி செய்யும் படி ஜான்  பீட்டர் குடும்பத்தை அறிவுறுத்திய தாக கூறப்படுகிறது. ஆவேசம்  இதனால் ஆவேசமடைந்த ஜான் பீட்டர் குடும்பத்தினர்  சட லத்தை எடுத்துச்சென்று போராட் டம் நடத்த முடிவு செய்தனர். தக வலறிந்த கூடுதல் காவல் கண்கா ணிப்பாளர் சுகுமார், தேனி டிஎஸ்பி பார்த்திபன், ஆய்வாளர்கள் ராஜேஷ், வெங்கடாஜலபதி ஆகி யோர் தேவாலயத்தில் பேச்சு வார்த்தை  நடத்தினர். அதனைத் தொடர்ந்து கல்லறை தோட்டத்தில் புதைக்க சம்மதம் தெரிவித்து சமூக நிர்வாகிகள் கல்லறை சாவி யை கொடுத்து விட்டு சென்றனர். பின்னர் இறந்த ஜான் பீட்டர் உடலை உறவினர்கள் அடக்கம் செய்தனர்.