மதுரை, ஜூன் 20- தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் திங்களன்று வெளியிடப்பட்டது. இதில் மதுரை மாவட்டத்தில் வெற்றி பெற்றவர்கள் விவரம் வருமாறு மதுரை மாவட்டத்தில் 34,828 பேர் தேர்வெழுதினர். 33,745 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் தேர்ச்சி சதவீதம் 96.89. தேர்ச்சி பெற்றவர்களில் மாணவர்கள்- 16,333. மாணவி கள்-17,412. அதிக தேர்ச்சி மாணவிகள். சாதித்த அரசுப்பள்ளிகள் மதுரை: மொத்த அரசுப் பள்ளிகள்-72. தேர்வெழுதி யோர்-7,379. தேர்ச்சி பெற்றவர்கள்-6,972. தேர்ச்சி சதவீதம்-94.48. மாற்றுத் திறனாளிகள் அபாரம் (தேர்ச்சி பெற்றவர்கள் விவரம் அடைப்புக்குறிக்குள்) மதுரை மாவட்டத்தில் கண்பார்வையற்றவர்கள்-29, (29) காது கேட்காதோர்-வாய்பேசமுடியாதோர்-47 (45). இதர மாற்றுத்திறனாளிகள்-25 (23). இதரபிரிவினர்-44 (44) பேர் தேர்வெழுதினர்.