districts

img

குமரி மாவட்டத்தில் புதிய சுற்றுலா தளம்

நாகர்கோவில், டிச.01- கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாத்துறை மற்றும் பேரூராட்சி துறையின் சார்பில், புதிய சுற்றுலா தளங்கள் அமைப்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மா.அரவிந்த், பத்ம நாபபுரம் உதவி ஆட்சியர் கவுசிக், முன்னிலை யில் சிற்றாறு II அணை மற்றும் திற்பரப்பு நீர்வீழ்ச்சி பகுதிகளை புதனன்று (நவ.30) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார். பின்னர் அவர் கூறுகையில்: இன்றைய தினம் சிற்றாறு-II அணையில் சுற்றுலா தொடர்பான வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.  ஆய்வில் சிற்றாறு  II அணை பகுதியில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக  புதிய படகு குழாம் அமைத்தல் மற்றும் படகு குழாம் அமைக்கப்படும் இடம் அதற்கான கட்டிட வரைபடம் மேலும் படகுதளம் அமைக்கும் இடங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்ட தோடு, ஆய்வில் தளம் அமைக்கும் இடங்க ளை பற்றியும் அதனுடைய தன்மைகள் பற்றி யும் சுற்றுலா வளர்ச்சிக்கழக அலுவலர்களி டம் கேட்டறியப்பட்டது.  மேலும் படகு குழாமுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் தங்க ளுடைய வாகனங்களை நிறுத்துவதற்கு அதன் அருகிலேயே சுமார் 2.4 ஏக்கர் பூமியில் கார் பார்க்கிங் அமைக்கும் இடமும் தேர்வு செய்யப்பட்டு அதனையும் ஆய்வு செய்யப்பட்டது.   மேலும், அணையின் மற்றொரு பகுதியில் படகு தளம் அமைத்து சுற்றுலா படகில் செல்வோர்கள் இறங்குவதற்கு வசதி யாக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பாக கூடார சுற்றுலா போன்ற அமைப்பு ஏற்படுத் தப்பட உள்ளது.  படகு குழாம் மூலம் சுற்றுலா  செல்லும் சுற்றுலாப் பயணிகள் அணைப்பகு திகளில் காணப்படுகின்ற தீவுகளுக்கும் சென்று திரும்பும் வகையில் படகு குழாம் அமைக்கப்படும்.  அவ்வாறு செல்லப்படும் தீவில் சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பாக மேற்கொள்ளப்பட இருகின்ற வளர்ச்சிப்பணி கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  

இது அனைத்தும் சூழியல் சுற்றுலா சார்ந்த வளர்ச்சிப்பணிகளாக அமையும்.  குறிப்பாக கூடாரம் வைத்து உணவகம் அமைப் பது போன்ற வசதிகள் காணப்படும்.  சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படாதவாறு சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளுமாறும்,  அணையில் பராமரிப்பு இன்றி காணப்படு கின்ற பூங்காவினையும் பராமரிப்பு மேற்கொள்ளவும் துறைசார்ந்த அலுவலர்க ளுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், சிற்றாறு -2 அணையில் சுமார் ரூ.3.50 கோடி செலவில் வளர்ச்சிப் பணிகள் அனைத்தும் சுற்றுலா வளர்ச்சிக்கழகம் மூலம் மேற்கொள் ளப்படுவதோடு, படகுகுழாம் சுற்றுலா வளர்ச்சி கழகத்தால் நடத்தப்படும் என்ப தையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மா.அரவிந்த் தெரிவித்தார். தொடர்ந்து, கடையால் பேரூராட்சிக் குட்பட்ட திற்பரப்பு நீர்வீழ்ச்சி பகுதியில் சுற்றுலா தளத்தை மேம்படுத்துவது குறித்து  துறைசார்ந்த அலுவலர்களுடன் ஆட்சித் தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.    நடைபெற்ற ஆய்வில், சுற்றுலா அலுவ லர்கள் சீதாராமன், சதீஷ்குமார், பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் (நீர்வள  ஆதார அமைப்பு), உதவி இயக்குநர் (பேரூ ராட்சி), பேரூராட்சி செயல் அலுவலர்கள், சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் தொழில்நுட்ப உதவியாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;