மதுரை, செப்.21- மதுரை மாவட்டம், மதுரை தெற்கு மாசி வீதி, எழுத்தாணிக்கா ரத்தெருவில் மதுரை புத்தகத் திரு விழா-2022 நிகழ்வை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு வாசிக்கும் ”மதுரை வாசிப்பு” நிகழ்வினை செப்டம்பர் 21 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்க டேசன், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் ஆகி யோர் துவக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் பேசுகையில், மதுரை மாவட் டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளி லும் ஒருவார காலத்திற்கு புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் குறித் தும், படையாற்றல் மிக்க மாண வர்களை எவ்வாறு கண்டறிவது என்பது பற்றியும், படைப்பாற்றல் மிக்க மாணவர்களை கண்டறிந்தால் அம்மாணவர்களை எவ்வகையில் ஊக்குவிக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட உள் ளது. புத்தகத் திருவிழாவில் சிறப்பு பயிலரங்கம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பயி லங்கத்தில் மாணவ, மாணவியர் களுக்கு கடிதம் எழுததுதல், கவிதை போட்டிகள், நாடகம் புனைதல், கார்டூன் வரைதல் உள்ளிட்ட படைப்பாற்றல் மிக்க போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநிலத்திலேயே முதன் முறையாக இந்த சிறப்பு பயிலரங்கள் நமது மதுரை மாவட்ட புத்தகத் திருவிழா வில் அமைக்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது. இந்த போட்டி களில் அதிகளவில் மாணவ, மாண வியர்கள் பங்கு கொண்டு தங்களு டைய தங்களுடைய திறன்களை வெளிக்கொணரலாம் என்று தெரி வித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்க டேசன் பேசுகையில், இந்தியாவி லேயே வரலாற்று சிறப்புமிக்க, மிக பழமையான, மிக முக்கியமான இட மாக இந்த எழுத்தாணிக்காரத்தெரு விளங்கி வருகின்றது. எழுத்தா ணிக்காரத் தெரு என்றால் அந்த காலத்தில் ஏடுகளில் எழுதித்தான் ஒவ்வொரு பிரதியும் தயார் செய்வார் கள். ஏடுகளில் எழுதி தயார் செய்வ தற்கென்று எழுதி கொடுப்பவர்கள் வசித்த தெரு என்பதால் இத்தெரு விற்கு எழுத்தாணிக்காரத் தெரு என்று பெயர் சூட்டப்பட்டது. திருக் குறள் 10 பிரதிகள் வேண்டும் என் றால் மூன்று மாதங்களுக்கு முன் னரே எழுதுபவர்களிடம் கொடுத்து விட்டால் அவர்கள் மாதக்கணக்கில் எழுதி 1-ஆம் பிரதி, 2-ஆம் பிரதி என்று தயார் செய்வார்கள். ஆதி காலத்தில் புத்தகத்தில் எழுதி கொடுப்பதற்காகவே அமைக்கப் பட்ட தெரு இந்த எழுத்தாணிக்காரத் தெருவாகும். இந்தியாவிலேயே அடையாளத்தோடு விளங்கக்கூடிய தெருவாக இந்த எழுத்தாணிக்காரத் தெரு விளங்கி வருகிறது.
2 ஆயிரம் ஆண்டுகளாக நூல் களை ஏடுகளில் எழுதிக்கொடுப்ப தையே முழுநேர தொழிலாக வைத்திருந்தவர்கள் குடியிருந்த தெருவே இந்த எழுத்தாணிக்காரத் தெருவாகும். எழுத்தை, இலக்கி யத்தை, ஏடுகளை தனது அடையா ளமாகக் கொண்ட இந்த தெருவில் ”மதுரை வாசிப்பு” என்ற விழிப்பு ணர்வு நிகழ்வினை துவக்கி வைக் கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க, எழுத்தோடு சம்மந்தப்பட்ட இந்த இடத்திலிருந்து புத்தகக் கண் காட்சியின் பணிகள் துவக்கி வைக் கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட பொதுமக்கள், தென் மாவட்ட பொது மக்கள் இந்த புத்தகத் திருவிழாவில் அதிகளவில் பங்குபெற வேண்டும். மேலும், தங்களுடைய வீட்டு குழந் தைகளை, மாணவ, மாணவியர் களை இந்த புத்தகத் திருவிழாவில் ஒருநாளாவது கலந்து கொண்டு புத்தக வாசிப்பின் முக்கியத்து வத்தை அவர்கள் அறிந்து கொள்ள வழிவகை செய்து தர வேண்டும் என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், மதுரை மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், மதுரை மாமன்ற உறுப்பினர் பானு உள்ளிட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.