திருநெல்வேலி, ஜன .17- சென்னை பெருநகர வடக்கு மண்டல இணை ஆணையராக பணிபுரிந்து வந்த துரை குமார் நெல்லை மாநகர கமிஷன ராக நியமிக்கப்பட்டார். அவர் திங்கட் கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். நெல்லை மாநகர காவல் ஆணைய ராக பணியாற்றி வந்த செந்தாமரை கண்ணன் சென்னையில் உள்ள சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐ.ஜி.யாக இடமாற்றம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து சென்னை பெருநகர வடக்கு மண்டல இணை ஆணையராக பணிபுரிந்து வந்த துரை குமார் நெல்லை மாநகர ஆணையராக நியமிக்கப்பட்டார். அவர் திங்கட்கிழமை நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் அவர் நிருபர் களிடம் பேசும்போது சட்டம், ஒழுங்கு சரியாக இருந்தால் தான் மக்கள் நிம்மதியாக இருப்பார்கள். எனவே சட்டம், ஒழுங்குக்கு முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படும். குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். புதிய ஆணையர் துரை குமார் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் 1997-ம் ஆண்டு ஐ.பி.எஸ். முடித்து காவல் பணியில் சேர்ந்துள்ளார். வேலூரில் ஏ.எஸ்.பி.யாக பணியை தொடங்கிய இவர் 2006-ஆம் ஆண்டு எஸ்பியாக பதவி உயர்வு பெற்று கோவை யில் பணியாற்றினார். அதன்பிறகு திருச்சி, முதல்-அமைச்சரின் பாதுகாப்பு பிரிவு உள்ளிட்ட இடங்களில் பணி யாற்றிய இவர் கடந்த 2013-ம் ஆண்டு டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றார். அதன்பிறகு மும்பை சி.பி.ஐ.-யில் பணிபுரிந்த இவர் 2017-ஆம் ஆண்டு மீண்டும் சென்னையில் பணிக்கு திரும்பி னார்.கடந்த ஆண்டு சென்னை பெருநகர வடக்கு மண்டல இணை ஆணையராக பொறுப்பேற்ற அவர் தற்போது ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று நெல்லை மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றுள் ளார்.