districts

புதிய அமைச்சரவைமதுரை

புடாபெஸ்ட், மே 26- பிரதமர் விக்டர் ஓர்பானின் தலைமையில் புதிய அமைச்சரவை ஹங்கேரியில் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.  கடந்த 32 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வரும் ஓர்பான், இதுவரையில் இல்லாத அரசியல் நெருக்கடி யை நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது.  நிலையற்ற சூழல் நாட்டின் வளர்ச்சியைப் பாதிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். அடுத்த நான்கு ஆண்டுகளில் சவால்களை எதிர்கொள்ளத் தகுதியான நபர்களை அமைச்சர்களாகத் தேர்வு செய்துள்ளதாகக்  கூறிய அவர், மூன்று முக்கியமான நெருக்கடி களைப் பட்டியலிட்டுள்ளார்.  கொரோனா பெருந்தொற்று, உக்ரைன்  மோதல் மற்றும் ஐரோப்பிய ஆணையத்துட னான கருத்து மோதல்கள் ஆகியவற்றையே அவர் சவால்களாக இருக்கும் என்கிறார். இதுவரையில் இல்லாத அளவுக்கு நாடாளுமன்றத்தின் ஆதரவு அரசுக்கு  இருக்கப் போகிறது என்று நாடாளு மன்றத்தில் ஆற்றிய உரையில் அவர் தெரி வித்தார்.

;