districts

நெல்லை ஆம்னி பேருந்து நிலையம் முறையாகச் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படுமா?

திருநெல்வேலி, ஜூலை 29- நெல்லை மாநகர பகுதியில் தற்போது புதிய பேருந்து நிலைய பணிகள் முடிவடைந்து திறக்கப் பட்டுள்ளதால் பாளை பகுதியில் ஓரளவு போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது.  ஆனாலும் மாலை முதல் இரவு 8 மணி வரையிலும் மாநகர பகுதியில் ஆம்னி பேருந்துகளால் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. சந்திப்பு பேருந்து நிலையம் இடிக்கப்படுவ தற்கு முன்பாக அங்கிருந்து தினந்தோ றும் சென்னை, பெங்களூர், கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இதன் மூலம் பயணிகள் அதிக அளவில் பயன் அடைந்து வந்தனர். மாநகரில் மத்திய பகுதியில் அமைந்தி ருந்த இந்த பேருந்து நிலையம் புதி தாக நெல்லைக்கு வருபவர்க ளுக்கும்,இளம் பெண்கள் மற்றும் வய தான பெண்களுக்கும் மிகவும் பாது காப்பானதாக இருந்தது. இந்நிலையில் சந்திப்பு பேருந்து நிலையம் பகுதியில் ஆம்னி பஸ்களும் வந்து சென்றதால் அங்கு போக்கு வரத்து நெரிசல் அதிகரித்தது. அதனை சமாளிக்க பாளை வேய்ந்தான் குளம் அருகே புதிதாக ஆம்னி பேருந்து நிலை யம் கட்டப்பட்டது. இங்கு ஆம்னி பேருந்துகள் வந்து சென்றாலும்அது மக்களிடையே வரவேற்பை பெற வில்லை. ஆம்னி பேருந்தில் செல்ல  வேண்டுமானால் சந்திப்பு பேருந்து  நிலையத்திலிருந்து நகர பேருந்தில் ஏறி செல்லவேண்டி இருந்தது. இதனை பயணிகள் வீண் அலைச்சலாக கருதினர். ஆனாலும் காலப்போக்கில் அது பழகிப்போன நிலையில் புதிய பஸ் நிலையமும் இடிக்கப்பட்டு பணி கள் நடைபெற்றதால் ஆம்னி பஸ்  நிலையத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டது,அதன் பின்னால் பெருமாள்புரம் போலீஸ் நிலையம் எதிரே அமைந்துள்ள இலங்கை தமி ழர்கள் மறுவாழ்வு முகாமுக்கு சொந்த மான இடத்திலும் அரசு விரைவு பேருந்துகள் தற்காலிகமாக நிறுத்தப் பட்டு பயணிகளை ஏற்றி சென்றன. இதன் காரணமாக அங்கு ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் தற்காலிகமாக குடிநீர், கழிப்பிடம், மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.

இந்த நிலையில் புதிய பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டு திறக்கப் பட்டதால் ஆம்னி பேருந்து நிலைய மும், அகதிகள் முகாமில் இருந்த தற்காலிக பேருந்து நிலையமும் தற்போது வீணாக கிடக்கிறது. ஆம்னி பேருந்துகள் இங்கு வந்து முறையாக நின்று செல்வதில்லை. மாறாக வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளும் நெல்லையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளும் ஆங்காங்கே குறிப்பிட்ட சில இடங்களில் நின்று ஆம்னி பேருந்துகளில் ஏறி செல்கின்ற னர். அதன்படி தெற்கு புறவழிச் சாலை யில் புதிய பேருந்து நிலையத்திற்கு பஸ்கள் உள்ளே செல்லும் பாதையின் அருகே சாலை ஓரத்தில் ஆம்னி பஸ்கள் நிறுத்தப்பட்டு பயணிகள் அழைத்து செல்லப்படுகின்றனர். வண்ணார்ப்பேட்டை வடக்கு பைபா சில் செல்ல பாண்டியன் மேம்பாலம் ஆரம்பிக்கும் இடத்தில் ஆம்னி பேந்து கள் நிறுத்தப்படுகிறது. இது தவிர தச்ச நல்லூர்-மதுரை ரவுண்டானா அருகே மக்கள் நின்று ஏறி செல்கின்றனர். இந்த இடங்கள் நள்ளிரவில் புறப்படும் பேருந்துகளுக்கும், வெளி மாவட்டங்க ளில் இருந்து நள்ளிரவில் வந்து சேரும் ஆம்னி பேருந்துகளுக்கும், உகந்த இடங்களாக இருந்தாலும் பயணிகளுக்கு அவை உகந்ததாக இல்லை. ஒருவித அச்சத்துடனே பெண் பயணிகள் இந்த இடங்களில் நள்ளி ரவில் இறங்கி தங்களது வீடுகளுக்கு செல்ல வேண்டி உள்ளது. புதிய பேருந்து நிலையம் அல்லது ஆம்னி பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் இந்த பேருந்துகள் நிறுத் தப்பட்டால் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் எனவும், இது தவிர மற்ற இடங்களில் ஆம்னி பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையும் ஏற்படுகிறது எனவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ள னர். எனவே பெருமாள்புரத்தில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் பகுதியில் ஆம்னி பேருந்து களை முறைப்படுத்தி நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.