districts

img

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் மானாமதுரை ஸ்டேட் பாங்க் அருகே பிரச்சாரம்

மானாமதுரையில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் மானாமதுரை ஸ்டேட் பாங்க் அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மானாமதுரை நகராட்சி  15வதுவார்டு வேட்பாளர் பொன்னுசாமி, 27வது நகர்மன்ற தலைவர் வேட்பாளர் மாரியப்பன் கென்னடி,18வது வார்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஜெகதா விஜயகுமார், 14வதுவார்டு திமுக வேட்பாளர் சதீஸ்குமார் ஆகியோரை ஆதரித்து அமைச்சர் பெரியகருப்பன் பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பேரூராட்சி 9 ஆவதுவார்டு வேட்பாளரான திமுக மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன் அவர்களை ஆதரித்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.