districts

தென்மாநிலங்களில் உணவுப்பொருள் தயாரிப்பில் அதிக முதலீடு

சென்னை, ஜன.27- பருப்பு வகைகள், தானியங்கள், மசாலா பொருட்கள், நறுமணப்பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள வேகூல் நிறுவனம் தனது கிச்சன் ஜீ தயாரிப்புகள் மூலமாக  தென்மாநிலங்களில் கணிசமான மூதலீட்டை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. அரிசி, ரவை, கடலைமாவு மற்றும் இது தொடர்புடைய  பல தயாரிப்புகளை கிச்சன்ஜி இந்த ஆண்டு அறிமுகம் செய்ய விருக்கிறது.  தினசரி பயன்படுத்துகின்ற பருப்பு வகைகளோடு சேர்த்து சோயா சங்க்ஸ் (மீள்மேக்கர்) மற்றும் பிற சிற உணவுப் பொருட்களையும் இது வழங்கும். இத் தயாரிப்புகள் தற்போது சென்னையிலும்,  மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் கிடைக்கின்றன. இந்நிலையில் தனது உணவுபொருட்களை பொதுமக்களிடம் மேலும் பிரபல மடைய செய்ய திரைக்கலைஞர் சினேகாவை விளம்பர தூதுவராக இந்நிறுவனம் நியமித்துள்ளதாக வேகூல் உணவு தயாரிப்பு நிறுவன  நிர்வாக இயக்குனர் கார்த்திக் ஜெயராமன் கூறினார்.