கோவை,மே 15- செய்தி சேகரிக்க வந்த பத்திரிகை யாளர்களுக்கு பணம் வழங்கிய கோவை பாரதியார் பல்கலைக்கழக நிர்வாகத்தின் செயலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: பாரதியார் பல்கலைக்கழகத்தில் 37 ஆவது பட்டமளிப்பு விழா தமிழக ஆளு நர் ஆர்.என்.ரவி தலைமையில் நடை பெற்றுள்ளது. படித்து முடித்த ஆயி ரக்கணக்கான மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கும் இந்த நிகழ்வு குறித்து செய்தி சேகரிக்க வந்த பத்திரி கையாளர்களுக்கு பணம் வழங்கப்பட்ட தாக வீடியோ காட்சிகளும், புகைப்படங் களும் சமூக வலைதளங்களில் வெளி யாகியிருக்கின்றன. பல்கலைக்கழக நிர்வாகத்தின் இந்த செயல்பாடுகளை கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்ற மும் கண்டித்துள்ளது. நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட பத்தி ரிகையாளர்கள் பங்கேற்று இருந்த நிலையில் செய்தி வெளியிட லஞ்சமாக பல்கலைக்கழக நிர்வாகம் ஆயிரக்க ணக்கில் பணம் கொடுப்பது எந்த செலவு கணக்கில் எழுதப்படும் என்ற கேள்வி எழுகின்றது. எந்த ஊழலை மறைக்க வேண்டும் என்பதற்காக பணத்தை பத்திரிகையாளர்களுக்கு கொடுத்து பல்கலைக்கழக நிர்வாகம் வேண்டு கோள் விடுக்கின்றது என்ற கேள்வியும் எழுகின்றது. பத்திரிகையாளர்களுக்கு பணம் கொடுத்தது தமிழக ஆளுநருக்கு தெரிந்து நடைபெறுகின்றதா? இதுதான் பல்கலைக்கழகத்தின் நடைமுறையா?
எதை மறைக்க வேண்டும் என பல்க லைக்கழக நிர்வாகம் கருதுகின்றது. தமிழகம் முழுவதும் பல்கலைக்கழ கங்களில் வேந்தர்களும், துணைவேந் தர்களும் பல முறைகேடுகளில் ஈடுபட்ட தாக விசாரணை நடந்து கொண்டிருக் கும் போது, இவ்வளவு பகிரங்கமாக பல்கலைக்கழகத்தின் மேடையில் தமி ழக ஆளுநரும், உயர் பொறுப்பில் இருப்பவர்களும் அமர்ந்திருக்கும் போதே நிகழ்ச்சி அரங்கின் இடத்தில் வைத்து பணம் கொடுப்பதன் மூலம் அங்கு இருந்த மாணவ, மாணவிகளுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் எதை சொல்லிக் கொடுக்கின்றது என்ற கேள்வியும் எழுகின்றது. நிமிர்ந்த நன்னடையும் , நேர்கொண்ட பார்வையும் என கவி பாடிய பாரதியின் பெயரில் இயங்கும் பல்கலைக்கழ கத்தில், லஞ்சத்திற்கு எதிரான சிந்தனை களை உருவாக்காமல், லஞ்சத்தை வளர்க்கும் விதமாக பல்கலைக்கழக நிர்வாகம் செயல்பட்டிருப்பது கண்ட னத்திற்குரியது. இதற்கு காரணமான வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரத்தில் நட வடிக்கை எடுக்கிறோம் என்கிற பெயரில் கண்துடைப்பாக கடைநிலை ஊழியரை பலிகடா ஆக்காமல் உரிய நபர் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.