districts

img

மிஸ் கூவாகம்: சென்னை நிரஞ்சனா தேர்வு

விழுப்புரம்,மே 2- கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டையில் நடந்த மிஸ் கூவாகம் 2023-ன் இறுதி போட்டியில் சென்னையை சேர்ந்த நிரஞ்சனா தேர்வு செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை அருகே கூவாகத்தில் அமைந்துள் ளது கூத்தாண்டவர் கோயில். இங்கு ஆண்டு தோறும் வெகு விமர்சையாக திருவிழா நடப்பது வழக்கம். இவ்விழாவில் தமிழ்நாடு  மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடு களில் இருந்தும் ஆயிரக்கணக்கான திரு நங்கைகள், நம்பிகள் கலந்து கொள்வது வழக்கம். இதில் கலந்து கொள்ள இந்த ஆண்டு வருகை தந்த திருநங்கைகளுக்கு பல்வேறு  போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் மிஸ்  கூவாகம் 2023 நிகழ்ச்சி உளுந்தூர்பேட்டை யில் நடைபெற்றது. அதில் 46 திருநங்கை கள் போட்டியில் கலந்து கொண்டனர். இறுதிப்போட்டி திங்களன்று (மே 1) மாலையில் நடந்தது. இந்த போட்டியை அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், க.பொன் முடி,  செஞ்சி மஸ்தான், க. ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிலையில் போட்டி தொடங்க இருந்த நிலையில் திடீரென அைடமழை தொடர்ந்து பெய்ததால் போட்டி நிறுத்தப்பட்டது. அதன்  தொடர்ச்சியாக செவ்வாய்க்கிழமை (மே 2)  விழுப்புரத்திலுள்ள கலைஞர் அறிவால யத்தில் மீண்டும் நடத்தப்பட்டது. அதில் மிஸ் கூவாகம் 2023  அழகியாக சென்னையை சேர்ந்த நிரஞ்சனா தேர்வு செய்யப்பட்டார். இரண்டாம் இடத்தை சென்னையை சேர்ந்த திஷாவும் மூன்றாம் இடத்தை சேலத்தை சேர்ந்த சாதனாவும் பிடித்தனர். தேர்வு செய்யப்பட்ட மிஸ் கூவாட கம் 2023- அழகிகளுக்கு பட்டயம் மற்றும் கிரீடம் சூட்டினர்.