districts

மதுரை முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில்  மருத்துவர்கள் தின விழா அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு

தூத்துக்குடி, ஜூலை 3- தூத்துக்குடியில் நடைபெற்ற மருத்துவா்கள் தின விழாவில் அமைச்சா் கீதாஜீவன் சிறப்பாகப் பணி யாற்றிய மருத்துவா்களுக்கு கேடயம் வழங்கினார். தூத்துக்குடி டிஎஸ்எப் பிளாசாவில் மருத்துவர்கள் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு ஆட்சியர் கி.  செந்தில்ராஜ் தலைமை வகித்தார் . மேயர் ஜெகன் பெரிய சாமி, ஆணையா் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்த னர். சிறப்பு அழைப்பாளராக சமூக நலன், மகளிர் உரிமைத் துறை அமைச்சா் கீதாஜீவன் கலந்துகொண்டு, சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவா்களுக்கு பரிசுகள், கேடயங்கள் வழங்கினார். விழாவில் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்கு நர் முருகவேல், துணை இயக்குநா் பொற்செல்வன், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துணை மருத்துவக் கண்காணிப்பாளா் குமரன், கோவில்பட்டி சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் போஸ்கோ ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனா்.

புதிய கிளை அமைப்பு

தென்காசி, ஜுலை 3- தென்காசி மாவட்டம், கடையம் ஒன்றியம், மந்தி யூரில் விவசாய தொழிலாளர் சங்க புதியகிளை அமைப்பு கூட்டம் நடைபெற்றது. தலைவராக இசக்கியம்மாள், செயலாளராக ராணி, பொருளாளர் வளர்மதி ஆகியோர் தேர்வு செய் யப்பட்ட னர். இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் வெங்க டேஷ் கலந்து கொண்டார். 

லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது 

தென்காசி, ஜூலை 3- தென்காசி மாவட்டம் புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டிஎன் புதுக்குடி பகுதியில் சட்ட விரோத மாக விற்பனைக்காக லாட்டரி சீட்டுகளை வைத்திருந்த பாம்பு கோவில் சந்தை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கருத்தப்பாண்டி என்பவரின் மகன் முருகன்(47) மீது சார்பு ஆய்வாளர் .பரத் லிங்கம் வழக்கு பதிவு செய்து கைது செய்தார். நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தார். மேலும் அவரிடமிருந்து விற்ப னைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 50,000 மதிப்பி லான லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மாணவிக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியர் பணியிடை நீக்கம்

தூத்துக்குடி, ஜூலை 3- அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிக்கு பாலியல்  தொந்தரவு கொடுத்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், சிறுத்தொண்டநல்லூரில் உள்ள பள்ளியில் மாணவ-மாணவிகள் பயின்று வருகின்ற னர். இந்த நிலையில், பிளஸ்-2 பயிலும் மாணவி ஒரு வருக்கு பள்ளியின் விலங்கியல் துறை ஆசிரியர் அழகர் என்பவர், பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜிடம் புகார் தெரிவித்தனர். இதை யடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி தலைமையிலான குழுவினர் சம்பந்தப் பட்ட ஆசிரியர் மீதான புகார் குறித்து பள்ளிக்கு நேரில்  சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை யின் அடிப்படையில் ஆசிரியர் அழகரை பணி இடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பால தண்டாயுத பாணி உத்தரவிட்டார். தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.

இளம்பெண்ணை உயிரோடு எரித்த கணவர் கைது மாமனார், மாமியாருக்கு போலீஸ் வலைவீச்சு

தூத்துக்குடி, ஜூலை 3 தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே உள்ள மேல  கடம்பா கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். லாரி டிரை வராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பாப்பா  (38). இந்த தம்பதிகளுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திரு மணம் ஆனது. 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில்  முத்துக்குமார் வீடு கட்டுவதற்காக மனைவி பாப்பா விடம் நகைகளை கேட்டு தொந்தரவு செய்தாராம். அவர்  நகையை கொடுக்க மறுத்து விட்டாராம். இந்நிலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த முத்துக்குமார் மனைவி மீது மண்ணெண்ணையை ஊற்றி  தீ வைத்தாராம். இதற்கு அவரது மாமனார்- மாமியார் உடந்தையாக இருந்தார்களாம். இதில் பலத்த தீக்காயம் அடைந்த பாப்பாவை அப்பகுதி மக்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில்சேர்த்தனர். அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது, இந்த சம்பவம் குறித்து  குரும்பூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கணவர் முத்துக்  குமாரை கைது செய்தார். மேலும் அவரது தந்தை சந்தனம், தாயார் சந்திர புஷ்பம் ஆகிய 2 பேரையும் தேடி வரு கிறார்கள்.

கோவை அணிக்கு எதிரான ஆட்டத்தில் மதுரை வெற்றி

நத்தம், ஜூலை 3- தமிழ்நாடு பிரிமியர் லீக் டி20 போட்டி கோவை, நத்தம்,  நெல்லை, சேலம் உள்ளிட்ட இடங்களில் நடந்து வருகிறது.  இதில்  மதுரை மற்றும் கோவை அணிகளுக்கு இடையே யான 8-வது லீக் ஆட்டம் நத்தம் என்.பி ஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.முதலில் களமிறங்கிய கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்களை எடுத்தது.கோவை அணியில் அதிகபட்சமாக முகிலேஷ் 50 ரன்களும் , சுரேஷ் 46 ரன்களும், எடுத்தனர்.மதுரை அணி தரப்பில் சிலம்பரசன் 3 விக்கெட்டுகளையும், சாந்து, ஆகாஷ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி னர். இதனையடுத்து களமிறங்கிய மதுரை அணி 19.5 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 152 ரன் கள் அடித்து இலக்கை எட்டியது.மதுரை அணியில் சதுர்வேத் 45 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார்.கோவை அணி தரப்பில் ஷாருக்கான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

விவசாயியிடம் ரூ.3லட்சம் லஞ்சம்: ஆர்.ஐ., விஏஓ கைது

தூத்துக்குடி, ஜூலை 3- விளாத்திகுளம் அருகே ரூ.3 லட்சம்  லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர்,  வி.ஏ.ஓ. ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்தி குளம் அருகே உள்ள பனையூர் கிரா மத்தைச் சேர்ந்தவர் முனியசாமி, விவ சாயி. இவரும், அவரது குடும்பத்தின ரும் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த சுமார் 11 ஏக்கர் நிலத்தை அரசு  கடந்த 2004-ம் ஆண்டில் முனியசாமி யின் பெயருக்கு இலவச பட்டாவாக வழங்கியுள்ளது. அரசு சார்பில் இல வசமாக வழங்கப்பட்ட நிலத்தை 14 ஆண்டுகளுக்கு பின் விற்றுக்  கொள்ளலாம் என்பதன் அடிப்படை யில், தற்போது அந்த நிலத்தை விற்ப தற்கு முனியசாமி கோவில்பட்டி உதவி  கலெக்டரிடம் ஆட்சேபணை இல்லா சான்றுக்கு விண்ணப்பித்தார். இதையடுத்து அவரது பரிந்துரை யின் பேரில், முனியசாமியின் மனு குளத்தூர் வருவாய் ஆய்வாளர் செந்தில்முருகனின் பார்வைக்கு வந்தது. அவர் ஆட்சேபணை இல்லா சான்று வழங்க வேண்டுமானால் ஏக்க ருக்கு ரூ.30 ஆயிரம் வீதம் 11 ஏக்க ருக்கு ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் தர வேண்டும் என்று கேட்டார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத முனிய சாமி இதுகுறித்து தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் ஆலோ சனைப்படி முனியசாமி சனிக்கிழமை  வருவாய் ஆய்வாளர் செந்தில்முருக னுக்கு ரூ.3 லட்சம் கொடுப்பதற்காக குளத்தூருக்கு வந்து அவரது போனில்  தொடர்பு கொண்டு பணத்தை பெற்றுக்  கொள்ளுமாறு கூறி உள்ளார். ஆனால்,  வருவாய் ஆய்வாளர் செந்தில்முருகன் தான் வெளியூரில் இருப்பதாகவும், அந்த பணத்தை குளத்தூர் (கிழக்கு)  கிராம நிர்வாக அலுவலர் உமேஷ்குமா ரிடம் கொடுக்குமாறும், அவரிடம் இருந்து நாளை (திங்கட்கிழமை) பணத்தை பெற்றுக் கொள்வதாகவும் கூறினார். இதையடுத்து முனியசாமி கிராம  நிர்வாக அலுவலகத்துக்கு வந்து,  கிராம நிர்வாக அலுவலர் உமேஷ் குமாரிடம் ரசாயனம் தடவிய ரூ.3 லட்சம் ரூபாய் நோட்டுகளை கொடுத்தார். அந்த பணத்தை உமேஷ்குமார் வாங் கியபோது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ தலைமையிலான போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் வருவாய் ஆய்வாளர் செந்தில் முருகன் அருப்  புக்கோட்டையில் கைது செய்யப்பட் டார்.'

நெல்லையப்பர் கோவிலில் அன்னதானம்: சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்

திருநெல்வேலி, ஜூலை 3- நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆனித்  திருவிழா ஞாயிற்றுக்கிழமை காலை கொடியேற்றத்து டன் தொடங்கியது. இதனையொட்டி முக்கிய திருவிழா நாட்களில் நாள் ஒன்றுக்கு 500 பேருக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தை சபாநாயகர் அப்பாவு ஞாயிற்றுக் கிழமை தொடங்கி வைத்தார். 500 பேருக்கு அன்னதானம் கடந்த 2002-ம் ஆண்டு முதல் நெல்லையப்பர் கோவிலில்  அன்னதான திட்டம் தொடங்கப்பட்டு தினமும் 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் சட்ட மன்ற கூட்டத்தொடரின் போது அன்னதான திட்டத்தை விரிவுப்படுத்தி முக்கிய திருவிழா நாட்களில் தினமும் 500 பேருக்கு அன்னதானம் வழங்க அறிவிப்பு வெளியிடப்  பட்டது. அதன்படி ஞாயிறன்று சபாநாயகர் அப்பாவு ஆயிரங்கால் மண்டபத்தில் அன்னதானத்தை தொடங்கி  வைத்தார். நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 20 கோவில்  களில் இந்த அன்னதான திட்டம் நடைபெற்று வருகிறது.  இதன் மூலம் நாள்தோறும் 1100 பேர் பயனடைந்து வரு கின்றனர்.  அன்னதான திட்டம் நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, நெல்லை தாசில்தார் சண்முக சுப்பிரமணியன், நெல்லையப்பர் கோவில் செயல் அலு வலர் அய்யர் சிவமணி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாலை ராஜா, ஏ.எல்.எஸ்.லெட்சுமணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உலக மக்கள் தொகை தினம்: பள்ளி மாணவர்களுக்கு போட்டி

திருநெல்வேலி, ஜூலை 3- மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு மாவட்ட அறி வியல் மையத்தில் வருகிற 11-ந் தேதி (திங்கட்கிழமை) காலையில் ‘மிகுதியான மக்கட்தொகையினால் வளர்ச்சி மற்றும் இயற்கையின் மீது ஏற்படும் விளைவு’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் 8 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ - மாணவி களுக்கான போஸ்டர் உருவாக்குதல் போட்டி நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் 11-ந்தேதி காலை 10.30 மணிக்கு அறிவியல் மையத்திற்கு நேரில்  சென்று கலந்து கொள்ளலாம். ஏ-4 அளவு வரைபடத்தாள் மட்டும் வழங்கப்படும். தேவையான அனைத்து பொருட்க ளும் போட்டியில் பங்கு பெறுபவர்கள் கொண்டு வர வேண்டும் என்று அறிவியல் மைய அலுவலர் குமார் தெரிவித்துள்ளார்.  இந்த போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு  மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். கலந்து கொள்பவர்கள் அனைவரும் அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவியல் மைய கல்வி அலுவலர் மாரி லெனின் தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு போட்டியாளர்கள் 94429 94797 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

கயத்தாறு நான்கு வழிச்சாலையில்  30 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்

திருநெல்வேலி, ஜூலை 3- நெல்லை டவுன் முத்தம்மாள் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி ( வயது 30 ). இவர் கோவில்பட்டியில் இருந்து  நெல்லைக்கு காரில் வந்து கொண்டிருந்தார். கயத்தாறு  அருகே நாற்கர சாலையில் கார் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சாலை ஓரமாக இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் 30 அடி பள்ளத்தில் பாய்ந்தது. இதில் அவருக்கு பலத்த  காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவ மனயில் சிகிச்கைக்காக சேர்த்தனர். கார் மோதியதால் சேத மடைந்த மின்கம்பம் வளைந்து உயர் மின்னழுத்த கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்தது.  விபத்துக்குறித்து தகவல் அறிந்த கயத்தாறு இன்ஸ்பெக்டர் முத்து, தனிப்பிரிவு ஏட்டு பிருதிவிராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  அசம்பாவிதம் ஏதும் நடைபெறாத வகையில் போக்கு வரத்தை சீர் செய்தனர். மேலும் மின்வாரிய அலுவலர் களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மின்வாரிய பணி யாளர்களும் விபத்து பகுதிக்கு சென்று துரிதமாக பணி களை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் 2 மணி  நேரத்திற்கு மேலாக மின்சாரம் தடைபட்டது.

அரசு ஊழியர் சங்க கருத்தரங்கம்

திருநெல்வேலி, ஜூலை 3- அரசு ஊழியர் ஆசிரியர்களின் எழுச்சி நாளை முன்னிட்டு பாளையங்கோட்டை மகாராஜா நகர் சிஐடியு அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் இருப தாம் ஆண்டு தொடர் முழக்க கருத்த ரங்கம் நடைபெற்றது.  இந்த கருத்தரங்கிற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நெல்லை மாவட்ட தலைவர் பார்த்தசாரதி தலைமை தாங்கி னார், மாவட்ட துணைத்தலைவர் சகுந்தலா  வரவேற்றார், தமிழ்நாடு அரசு அனைத்து  துறை ஓய்வூதியர்  சங்க மாநிலத் துணைத் தலைவர் ஆறுமுகம் கருத்தரங்கை துவக்கி வைத்தார். முன்னாள் மாநில துணைத்தலை வர் சுகுமார் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட பொருளாளர் முருகன் நன்றி கூறினார். கருத்தரங்கில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி, வரு வாய் கிராம உதவியாளர், ஊராட்சி செயலா ளர், ஊர் புற நூலகர் உள்ளிட்ட சிறப்பு கால முறை ஊதியம் பெறுபவர்களுக்கு வரை யறுக்கப்பட்ட ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும், சாலை பணியாளர் களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி வரன்படுத்த வேண்டும், அரசு துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பிட  வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திருவட்டார் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நாகர்கோவில், ஜுலை 3-  திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிக ரிப்பதைத் தொடர்ந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் 418 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஆறாம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த 29-ஆம் தேதி முதல் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. ஞாயிறன்று மாலை 6 மணிக்கு கலை இளமணி கக்கோடு செல்வி பவகேத்ரா குழுவினரின் பக்தி  இன்னிசை நடைபெற்றது. இரவு 7 மணிக்கு  நாமக்கல் நாட்டியாஞ்சலி டிரஸ்ட் சர்மிதா பிள்ளை குழுவினரின் பரதநாட்டியம் நடை பெற்றது.சனியன்று விடுமுறை என்ப தால் தமிழகம் மட்டுமல்லாது கேரளாவில்  இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோயி லுக்கு வந்திருந்தனர். மணிக்கணக்கில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று  சுவாமி தரிசனம் செய்தனர். தமிழ்நாடு, கேரளாவில் இருந்து கும்பா பிஷேக நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வர இருப்பதால் வாகனம்  நிறுத்துவதற்காக 7 இடங்கள் முதற்கட்ட மாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. திரு வட்டார் சப்பாத்து அருகாமை உள்ள இடம் ஆற்றூர்.என்.வி.கே.எஸ்.டி. கல்வி நிறு வனம், ஆற்றூர் மரியா கல்லூரி வளாகம், கழுவன் திட்டையில் இருந்து ஆற்றுக்குச்  செல்லும் பாதை, எக்செல் பள்ளி வளா கம், திருவட்டார் அரசு உயர்நிலைப்பள்ளி, திருவட்டார் போக்குவரத்துக் கழக பணி மனை ஆகிய இடங்களில் வாகனங்கள் நிறுத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கூடு தலாக வாகனங்கள் வருகை தந்தால் புத்தன்கடை புனித வியாகப்பர் ஆலய வளாகம், திருவட்டார் அருணாசலம் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் வாகனங்கள் நிறுத்த வசதி செய்யப்படும் என திருவட்டார் காவல் ஆய்வாளர் ஷேக்  அப்துல் காதர் தெரிவித்தார். கோவிலுக்கு வருகை தரும் பக்தர் களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதி கரித்து வருகிறது. இதனால் திங்கள் (ஜுலை 4) முதல் நாகர்கோவில், மார்த்  தாண்டம், குலசேகரம், அழகிய மண்டபம், தக்கலை ஆகிய இடங்களில் இருந்து திரு வட்டாருக்கு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தனிநபர் ஆக்கிரமிப்பில் மயானம்: சடலத்தை சாலையில் வைத்து மறியல்

பழனி, ஜூலை 3- பழனி அடுத்த கோரிக்கடவு ஊராட்சிக்கு  சொந்தமான மயான பகுதியை கோவிந்த ராஜ் என்ற தனி நபர் ஆக்கிரமிப்பு செய்து விவ சாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சடலங்களை புதைப்ப தற்கு இடம் இல்லாததால் தனிநபர் ஆக்கிர மிப்பு செய்துள்ள இடத்தை மீட்டுத்தர வேண்  டும் என்று கோரிக்கடவு மக்கள் வருவாய் துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து வருவாய்த்துறையினர் மயான இடம் முழுவதையும் அளந்து அதி காரிகள் முன்னிலையில் கம்பி வேலி அமைத்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர். தற்போது அப்பகுதியில் முதியவர் ஒரு வர் இறந்தார். அவரது சடலத்தை புதைப்ப தற்காக குழி தோண்டுவதற்காக சென்ற போது, இடத்தை ஆக்கிரமித்த கோவிந்த ராஜ் என்பவர் தடுத்தார். இதனால் கோபம டைந்து இறந்தவர் உடலை நடுரோட்டில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வத்தல், துவரை, உளுந்து, காபி விலை கிடு கிடு உயர்வு

விருதுநகர், ஜூலை 3- விருதுநகர் மார்க்கெட்டில், வாரந் தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வெளி யிடப்பட்டு வருகிறது. அதில், கடலை  எண்ணெய் விலையானது கடந்த வாரம்  15 கிலோ ரூ.2850 க்கு விற்கப்பட்டு வந்த  நிலையில் தற்போது ரூ.50 உயர்த்தப்  பட்டு 2900 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மேலும், குண்டூர் வத்தல் ஒரு  குவிண்டால் கடந்த வாரம் ரூ.20 ஆயி ரம் முதல் 21,500 வரை விற்கப்பட்டு வந்த நிலையில், இந்த வாரம் அதிவேகமாக விலை உயர்ந்து ரூ.23 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. பதற வைக்கும் பருப்பு விலை  இதேபோல், துவரம் பருப்பு கடந்த வாரத்தை விட ரூ.100 உயர்ந்து ரூ. 9,200க்கும், உருட்டு உளுந்தம்பருப்பு ரூ.100 உயர்ந்து தற்போது ரூ. 10,300க்கும் விற்கப்படுகிறது. இதே போலி தொலி உளுந்தின் விலையும் ரூ.100 உயர்ந்து தற்போது ரூ.9200க்கு விற்பனையாகிறது. பாசிப்பயறு விலை  கடந்த வாரம் ரூ.6,700க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.100 உயர்ந்து ரூ.6,800க்கு விற்கப்படுகிறது. மசூர் பருப்பின் விலையானது கடந்த வாரம் ரூ.10,100க்கு விற்கப்பட்டு வந்த  நிலையில், இந்த வாரம் திடீரென ரூ.700  உயர்த்தப்பட்டு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.10,800ஆக விலை நிர்ணயம் செய்  யப்பட்டுள்ளது. இதனால், சாதாரண, ஏழை, எளிய மக்கள் மிகுந்த கவலை யில் ஆழ்ந்துள்ளனர். காபி விலை உயர்வு  மேலும், காபி பிளாண்டேஷன் பி.பி  வகை 50 கிலோ கடந்த வாரம் ரூ. 17,500க்கு விற்கப்பட்டு வந்த நிலையில்,  இத்ந வாரம்  திடீரென ரூ.4,100 உயர்ந்து ரூ.21600க்கு விற்கப்படுகிறது. அதில், ஏ.வகை காபி பிளாண்டேஷன் ரூ.3,500 உயர்ந்து தற்போது 21500க்கும், அதில் சி வகையானது ரூ.4ஆயிரம் வரை திடீரென உயர்த்தப்பட்டு 19,500க்கும், பிளாக்பிரவுன் வகை ரூ.3,500 உயர்த் தப்பட்டு 8ஆயிரத்திற்கும், ரோபஸ்டா பிபி வகை ரூ.1,800 உயர்த்தப்பட்டு ரூ.9800க்கும் விற்பனை செய்யப்படு கிறது. இதனால், ஹோட்டல்கள் மற்றும்  கடைகளில் காபியின் விலையானது மேலும்  உயரும் அபாயம் ஏற்பட்டுள் ளது.

முன்னாள் ராணுவ வீரர்களை நியமிக்க எதிர்ப்பு

மதுரை, ஜூலை 3-  மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஆண்டு முழுவதும் பல்வேறு மாநிலங்கள், நாடுகளில் இருந்து  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணி கள் வருகை தருகிறார்கள். கோவில் பாதுகாப்பிற்காக 100 காவ லர்கள் நாள்தோறும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர் . இந்நிலையில் மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சொந்த மான உப கோயிலில் பாதுகாப்பு பணியில் முன்னாள் ராணுவ வீரர் களை அவுட்சோர்சிங் முறையில் தேர்வுசெய்ய கோவில் நிர்வாகம் ஒப்பந்தம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  ஒப்பந்த அறிவிப்பில் பாது காப்பு பிரிவில் பணியாற்ற 67 முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் மின் உதவியாளர், ஓட்டுநர், பிளம்பர் என சுமார் 79 பணியிடங்களுக்கு அவுட்சோர்சிங் முறையில் ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளதாகவும், இந்திய ராணுவத்தில் சுபேதார் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற 30 முதல் 50 வயது உடைய முன்னாள் ராணுவ வீரர்கள் தகுதி உடைய வர் எனவும், 84 வகையான நிபந்தனைகளை விதித்து கோவில் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு பணியில் விருப்பமுள்ள ஒப்பந்ததாரர்கள் வருகின்ற 14 ஆம் தேதி வரை கோவில் அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.  இது குறித்து சமூக ஆர்வ லர்கள் கூறுகையில், ஏற்கனவே மீனாட்சியம்மன் கோயில் நான்கு  கோபுர பகுதிகளிலும் காவல்துறை யினர் பாதுகாப்பு பணியில் இருக்கின்றனர். பொதுமக்களும் முழு பரிசோதனைக்கு பின்பு தான் கோவிலுக்குள் அனுமதிக்கப்படு கிறார்கள், மொபைல் போன்களும் கொண்டு செல்ல அனுமதி இல்லை. போதுமான பாதுகாப்பு  காவல் துறை மூலம் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது ஒப்பந்த அடிப்படையில் பாதுகாப்பிற்கு துணை ராணுவப்படை மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் பணி யமர்த்தப்படுகிறார்கள். இது  கோவிலுக்கு வரும்  மக்கள் மத்தி யில் கூடுதல் பதற்றத்தை ஏற் படுத்தும்.  இந்தத் திட்டம் குறித்து இந்து சமய அறநிலைய துறைக்கு தெரியுமா?  அரசு பொதுமக்களை பாதிக்காத அளவில் திட்டங்கள் மேற் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர்.




 

;