மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருத்து புதுதில்லி, மார்ச் 17- முஸ்லீம் பெண்கள் ஹிஜாப் அணிவது தொடர்பாக கர்நாடக உயர்நீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பு துரதிர்ஷ்டவச மானதாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கூறியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, இந்திய அரசமைப்புச்சட்டம் மற்றும் நாட்டின் சட்டங்கள் உத்தர வாதப்படுத்தியுள்ள, அனைவருக்குமான கல்வி உரிமை மீதான தாக்குதலாகும். இந்தத் தீர்ப்பில் பிரச்சனைக்குரிய எண்ண ற்ற அம்சங்கள் இருக்கின்றன. முஸ்லீம் மாணவிகள் வகுப்பறைகளில் ஹிஜாப் அணி யக்கூடாது என்கிற கர்நாடக அரசாங்கத்தின் பிழையான உத்தரவை இந்தத் தீர்ப்பின் வழியாக அனுமதித்திருப்பதன் மூலம் கர்நாடக மாநிலத்தில் படிக்க வரும் முஸ்லீம் பெண்களை அவ்வாறு கல்வி கற்கச் செய்திடாது விரட்டியடித்திடும் விளைவினை இது உடனடியாக ஏற்படுத்திடும். இவ்வாறு முஸ்லீம் பெண்கள் ஹிஜாப் அணிந்து வருவதை இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் விதியை மீறிய ஒரு செயலாக எந்தக் காலத்திலும் கருதப்பட்ட தில்லை. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு, அண்டை மாநிலமான கேரளாவில் பள்ளி களிலும், உயர் கல்வி நிறுவனங்களிலும் அதிகமான அளவில் முஸ்லீம் பெண்கள் கல்வி பயின்று கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்தத் தீர்ப்பு ஹிஜாப் அணிவது தொடர்பாக கல்லூரிகளில் இயங்கும் குழுக்கள் தீர்மானித்திட உரிமை உண்டு என்று தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் பாஜக தன் மதவெறித் தீயை வெறித்தன மாக விசிறிவிட இது வழி வகுத்திடும். நாடு முழுதும் கடும் விளைவுகளை இது ஏற்படுத்திடும். உச்சநீதிமன்றம் இது தொடர்பான மேல்முறையீடுகளை உடனடியாக விசாரித்திட வேண்டும். அதன்மூலம் நாட்டின் உச்சபட்ச நீதிமன்றமாக விளங்கும் உச்சநீதிமன்றம் அரசமைப்புச்சட்டம் அளித்துள்ள உத்தரவாதங்களை உயர்த்திப்பிடித்து, நீதி வழங்கிடும் என்று நம்புவோமாக என்று அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் தெரி வித்துள்ளது. (ந.நி.)