மதுரை, ஏப்.4- உடல் நலக் குறைவு காரணமாக கடந்த ஒரு வாரமாக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மூத்த தலைவர் நல்லகண்ணு வின் மருமகனும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய லாளருமான அழகுமுத்து பாண்டியன் காலமானார். அன்னாரது இறுதி நிகழ்ச்சி அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் உள்ள இல்லத்தில் செவ்வாயன்று நடைபெறுகிறது.