districts

மதுரை முக்கிய செய்திகள்

கோவில்பட்டி கூடுதல்  பேருந்து நிலையத்தில் குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கீடு  

தூத்துக்குடி, பிப்.8 கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்தில் செயல்படவுள்ள நகராட்சி தினசரி சந்தை வியாபாரிக ளுக்கு குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி நகராட்சி பசும்பொன் உ.முத்துராம லிங்கத் தேவா் தினசரி சந்தை புதுப்பிக்கப்பட வுள்ளதையொட்டி, கூடுதல் பேருந்து நிலையத்தில் நக ராட்சி தினசரி சந்தை செயல்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இதையடுத்து, நகராட்சி அலுவலகத்தில் வரு வாய் கோட்டாட்சியா் மகாலட்சுமி, காவல் துணை கண்காணிப்பாளா் கே.வெங்கடேஷ், நகா்மன்ற தலைவா் கா.கருணாநிதி மற்றும் நகராட்சி ஆணையா் ஆகியோா் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், கூடுதல் பேருந்து நிலையத்தில் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவா் தினசரி சந்தை வியாபாரிகளுக்கு கடைகள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படும் என முடிவெடுக்கப்பட்டது. எனவே, கூடுதல் பேருந்து நிலையத்தில் கடைகளை ஒதுக்கீடு செய்யும் வகையில், தினசரி சந்தை குத்தகை தாரா்கள், வணிகா் சங்க பிரதிநிதிகள் ஆகியோருடன் நகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.7) மாலை 4 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற பின், கூடுதல் பேருந்து நிலையத்தில் குலுக்கல் முறை யில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும். குத்தகைதாரா்கள், வணிகா் சங்க பிரதிநிதிகள் அனைவரும் இதில் கலந்து கொள்ளுமாறு  அறிவிக்கப்பட்டுள்ளது.


மீன்வளக்கல்லூரியில் பயிற்சி
தூத்துக்குடி, பிப். 8  தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வருகிற 17ஆம் தேதி “விரால் மீன்களின் இனப்பெருக்கம் மற்றும் குஞ்சு உற்பத்திக்கான தொழில்நுட்பம்” குறித்த ஒரு நாள் வளாக பயிற்சி நடைபெற உள்ளது.  தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் “விரால் மீன்களின் இனப்பெருக்கம் மற்றும் குஞ்சு உற்பத்திக்கான தொழில்நுட்பம்’’ பற்றிய ஒரு நாள் வளாக வழியிலான பயிற்சி 17.02.2023 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கபட உள்ளது. இப்பயிற்சியில் விரால் மீனின் உயிரியல், சினைமீன் தேர்வு செய்தல், ஹார்மோன் செலுத்தும் முறைகள், இனப்பெருக்கம், குஞ்சு சேகரித்தல், குஞ்சுகளை வளர்க்கும் தொழில்நுட்பம், உணவு மற்றும் உணவிடுதல் மேலாண்மை மற்றும் பொருளாதாரம் ஆகிய தலைப்புகளில் தொழில்நுட்ப வகுப்பு பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள அனைவரும் ரூ.300 செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சியாளர்கள் நேரடியாகவோ அல்லது கல்லூரி வங்கி கணக்கு வாயிலாகவோ பணத்தை செலுத்த லாம். பயிற்சியின் முடிவில் பயிற்சியாளர்களின் சான்றிதழ் மற்றும் பயிற்சி கையேடு வழங்கப்படும். இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள தொழில் முனைவோர் மற்றும் இதர நபர்கள் அனைவரும் 16.02.2023 மாலை 5 மணிக்குள் அலைபேசி மூலமாக அல்லது கீழ்க்கண்ட முகவரியில் தொடர்புகொண்டு கண்டிப்பாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பதிவு செய்ய தொடர்பு  கொள்ள வேண்டிய முகவரி:
உதவி பேராசிரியர், மீன் வளர்ப்பு துறை, மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தூத்துக்குடி - 628 008, அலை பேசி எண் (8072208079, 9600205124) மின் அஞ்சல்: anix@tnfu.ac.in, betsy@tnfu.ac.in


முக்கூடல் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் இல்லாததால் நோயாளிகள் அவதி

திருநெல்வேலி, பிப். 8- சேரன்மகாதேவி முடுக்கு தெருவை சேர்ந்தவர் நட ராஜன் ( 58 அதே ஊரை சேர்ந்த பழைய கிராமம் தெருவில் வசிக்கும் மீனாட்சிசுந்தரம் (64) ஆகிய இருவரும் இடைகால் சிவன் கோவிலில் பூஜை செய்து விட்டு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்த னர். மோட்டார் சைக்கிளை நடராஜன் ஓட்டினார். கடையம் - நெல்லை ரோட்டில் முக்கூடல் தாம்போதி பாலத்தில் செல்லும்போது மாடு குறுக்கே வந்ததால் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது நடராஜன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் ஏற்பட்ட விபத்தில் மீனாட்சி சுந்தரத்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு போராடிய மீனாட்சி சுந்தரத்திற்கு முக்கூடல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல்சிகிச்சைக்காக நெல்லை  அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்து வர்கள் பரிந்துரைத்த நிலையில், அந்த மருத்துவ மனையில் ஆம்புலன்ஸ் இல்லாததால் தனியார் வாக னத்தை வாடகைக்கு எடுக்க சென்றனர். இதனால் நீண்ட நேர தாமதம் ஏற்பட்டு, அதன்பின்னர் தனியார் வாக னத்தில் அவர் நெல்லைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதுகுறித்து முக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.


புதுமைப்பெண்  இரண்டாம் கட்ட திட்டத் தொடக்க விழா

தென்காசி, பிப். 8 தென்காசி மாவட்டம், இ.சி.ஈஸ்வரன்பிள்ளை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதனன்று (08.02.2023) புதுமைப்பெண் இரண்டாம் கட்ட திட்டத் தொடக்கவிழா நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச் சந்திரன்  மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தின் மூலம் வங்கி கணக்கு அட்டைகளை மாணவிகளுக்கு வழங்கினார். இத்திட்டத்தின் மூலம், தென்காசி மாவட்டத்தில் முதற்கட்டமாக 37 கல்லூரிகளின் கீழ் 1418 மாணவிகள் பயன்பெற்றனர். தற்போது இரண்டாம் கட்டமாக 37 கல்லூரிகளில் 859 மாணவிகள் பயன்பெற உள்ளனர்.


சிறப்பு காவல்  உதவி ஆய்வாளர்  மரணம்

தூத்துக்குடி, பிப். 8. கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் பணி புரிந்து பணி ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் இருதயராஜ் (64) புதனன்று அதிகாலை உடல்  நலக்குறைவால் காலமா னார். 1986 ஆம் ஆண்டு இரண்டாம் நிலை காவல ராக பணியில் சேர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலை யங்களில் பணியாற்றி பதவி உயர்வு பெற்று கோவில் பட்டி மேற்கு காவல் நிலை யத்தில் சிறப்பு உதவி ஆய் வாளராக பணிபுரிந்து கடந்த 2018ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இவருக்கு மனை வியும், 3 பிள்ளைகளும் உள்ளனர். அன்னாரது இறுதிச் சடங்கு கோவில்பட்டி முத்தையம்மாள் தெருவில் உள்ள அவரது வீட்டில்  நடைபெற்றது. மாவட்ட காவல்துறை சார்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) பத்மாவதி தலைமையில் 16 போலீசார் இருதயராஜ் அவர்களது உடலுக்கு மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர். 


தோட்டத்தில் காட்டு யானைகள் அட்டகாசம்

திருநெல்வேலி ,பிப். 8- விக்கிரமசிங்கபுரத்தில் தோட்டத்தில் காட்டு யானை கள் அட்டகாசம் செய்தன. நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருணா சலபுரம் பகுதியைச் சேர்ந்த வர் கண்ணன் (49). விவ சாயியான இவரது தோட்டத் தில் வனப்பகுதியில் இருந்து வந்த 5-க்கும் மேற்பட்ட யானைகள் புகுந்தன. அங்கிருந்த 10 தென்னை மரங்கள், 15 பனை மரங்க ளை வேரோடு பிடுங்கி சாய்த்து அட்டகாசத்தில் ஈடு பட்டது. இதுபற்றி கண்ணன் கூறுகையில், ‘இந்த பகுதி யில் அடிக்கடி யானை கூட்டம், வயல்களிலும், தோட்டங்களிலும் புகுந்து சேதத்தை உருவாக்கி வரு கிறது. இதனால் விவசாயிக ளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படு கிறது. ஆகவே இதுதொ டர்பாக வனத்துறையினர் நட வடிக்கை எடுக்க வேண் டும்’ என்றார்.


விபத்துகளை தவிர்க்க, பாதுகாப்பு வழிமுறைகள்: மின்வாரிய பொறியாளர் அறிவுரை

திருநெல்வேலி,பிப்.8- நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியா ளர் குருசாமி வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- வீடுக ளில் ஐ.எஸ்.ஐ. தரம் வாய்ந்த  மின்சாதனங்களை பயன் படுத்த வேண்டும். வீட்டு வயரிங் பணிகளை உரிமம் பெற்ற ஒப்பந்ததாரர்கள் மூலம் செய்ய வேண்டும். நுகர்வோர் இருப்பிடங்க ளில் மின் விபத்துகளை தவிர்க்க மின்கசிவு தடுப்பு சாதனத்தை பொருத்த வேண்டும். தற்போது புதிய மின் இணைப்புகளில் மின் கசிவு தடுப்பு சாதனம் பொ ருத்துவது கட்டாய மாக் கப்பட்டுள்ளது. கட்டுமான பணி மற்றும் வீடுகளில் வெள்ளை அடிக்கும் பணி களுக்கு பயன்படுத்தப்படும் ஏணிகளை கவனமாக கை யாள வேண்டும். விவசாய நிலங்களில் மின்வேலி அமைப்பதை தவிர்க்க வேண்டும். மின்வாரிய ஊழி யர்கள் மூலம் மின்தடைக ளை நிவர்த்தி செய்ய வேண்டும். மின் விபத்து களை தவிர்க்க மக்கள் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இவ் வாறு அதில் கூறப்பட்டுள் ளது.


 

;