தோழர் மணியக்காள் காலமானார்
மதுரை, டிச.13- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிழக்கு தாலுகா யா.குவாரி கிளைச் செயலாள ரும், மாதர் சங்க ஒன்றிய துணைச் செயலா ளருமான தோழர் மணியக்காள் ( வயது 70) அவர்கள் உடல் நலக் குறைவால் ஞாயிறன்று இரவு காலமானார். தோழர் மணியக்காள் கட்சி நடத்திய பல்வேறு போராட்டங்களிலும் வர்க்க, வெகுஜன அமைப்பு போராட்டங்களிலும் பங்கேற்றவர். கட்சியின் கிளைச் செய லாளராகவும், மாதர் சங்க ஒன்றியத் துணைச் செயலாளராகவும், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றிய நிர்வாகியாக வும் பொறுப்பு வகித்தார். அன்னாரது மறைவு செய்தியறிந்து கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செய லாளர் கே.ராஜேந்திரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.பி. இளங்கோவன், பா.ரவி, பி.ஜீவானந்தம், கிழக்கு தாலுகாச் செயலாளர் எம்.கலைச்செல்வன், மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.கே.பொன்னுத்தாய், மாவட்டத் தலைவர் க.பிரேமலதா, மாவட்டச் செயலாளர் செ.முத்துராணி, பொருளாளர் பரவதவர்த்தினி, கிழக்கு ஒன்றியச் செயலாளர் அம்பிகா, தலைவர் அழகம்மை, விவசாயிகள் சங்க மாவட்டத் துணைச் செயலாளர் பி.தனசேகரன் உட்பட கட்சியின் தாலுகா குழு உறுப்பி னர்கள், மாதர் சங்கத்தினர் என பலர் அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இறுதி நிகழ்ச்சி திங்களன்று மாலை நடைபெற்றது. மறைந்த மணியக்காள் அவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். இவரது மருமகள் மாதர் சங்கத்திலும் மார்க்சிஸ்ட் கட்சியிலும் உறுப்பினராக உள்ளார்.
கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
திருவில்லிபுத்தூர்,டிச.13- திருவில்லிபுத்தூர் அய்யம்பட்டி தெருவை சேர்ந்தவர் சௌந்தரபாண்டி யன் மனைவி செல்வி (37). சம்பவத்தன்று வீட்டு முன்பு 1 கிலோ 100 கிராம் கஞ்சா வுடன் திருவில்லிபுத்தூர் போலீசார் செல்வியை கைது செய்தனர். திருவில்லி புத்தூர் வைத்தியலிங்கபுரம் முருகன் மனைவி கருப்பாயி ( 40). இவர் சம்ப வத்தன்று அதே ஊரை சேர்ந்த சேகர் என்பவர் கட்டி வரும் வீட்டில் 100 கிராம் கஞ்சாவை வைத்துள்ளார். இதுகுறித்து வன்னியம்பட்டி போலீசார் விரைந்து சென்று கஞ்சா வைத்திருந்த கருப்பாயி யை கைது செய்தனர்.
நிலத்தகராறில் விவசாயியை கத்தியால் குத்தியவருக்கு சிறை
தேனி, டிச.13- தேனி மாவட்டம் தேவாரத்தில் நிலத் தகராறில் விவசாயியை கத்தியால் குத்தி யவருக்கு 5 ஆண்டு சிறை, 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தேனி நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. தேவாரம் கருப்பசாமி கோயில் தெரு வைச் சேர்ந்தவர்கள் விவசாயிகள் கண் ணன் (42), நாகராஜ் (46). இருவருக்கும் வயல்வரப்பு தொடர்பான பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2013 பிப்ரவரி 24 ஆம் தேதி வாய்த்தகராறு முற்றிய நிலையில் கண்ணன், நாகராஜை கத்தி யால் குத்த முயன்றார். இதை தடுக்க முயன்ற தங்கப்பாண்டி என்பவருக்கு வலது பக்க இடுப்பில் ரத்த காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக தேவாரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கண் ணனை கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட சார்பு நீதிமன்றத்தில் நடை பெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறி ஞர் ஜெயராஜ் ஆஜரானார். விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி ஏ.சுந்தரி, குற்றவாளிக்கு 5 ஆண்டு கடுங் காவல் தண்டனை, ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
தேனியில் நாளை பட்டா சிறப்பு முகாம்
தேனி, டிச.13- தேனி மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீ தரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தேனி மாவட்டத்தில் டிசம்பர் 15 அன்று ஆண்டிபட்டி வட்டத்திற்குட்பட்ட மயி லாடும்பாறை, மேகமலை ஆகிய கிரா மங்களுக்கு மயிலாடும்பாறை வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும், பெரிய குளம் வட்டத்திற்குட்பட்ட மேல்மங்கலம் (பிட்-2) கிராமத்திற்கு வைகை புதூர் திருமண மண்டபத்திலும், உத்தமபாளை யம் வட்டத்திற்குட்பட்ட காமயகவுண்டன் பட்டி கிராமத்தில் கே.கே.எஸ்.திருமண மண்டபத்திலும், இராயப்பன்பட்டி கிரா மத்தில் சமுதாயக் கூடத்திலும், போடி நாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட கொட் டக்குடி கிராமத்திற்கு போடிநாயக்கனூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. மேலும், சிறப்பு முகாம்களில் பட்டா திருத்தம் தவிர்த்து ஏனைய முதியோர் ஓய்வூதியம், வீட்டுமனை பட்டா, ஆக்கிர மிப்பு வரன்முறைப்படுத்துதல், சான்றி தழ்கள், குடிநீர், சாலை வசதி தொடர்பான கோரிக்கை மனுக்கள் அளித்து பயன் பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
தொண்டு நிறுவன ஊழியர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க கோரிக்கை
சிவகங்கை, டிச.13- தொண்டு நிறுவனங்களின் ஊழியர்களுக்கு தனியாக நல வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு ஆயிரம் தபால் கடிதங்கள் அனுப்ப தொண்டு நிறுவன கூட்டமைப்பு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை ஐஆர்சிடிஎஸ் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் ஐ.ஆர்.சி.டி.எஸ் இயக்குநர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநில அமைப்பா ளர் சேலம் ரெங்கநாதன் சிறப்பு ரையாற்றினார். காளையார் கோவில் சேவியர், ட்ரூபா ஒருங்கி ணைப்பாளர் மைக்கேல், காரைக் குடி ராமசாமி, மாலா, மருது பாண்டியர் ஆகியோர் பேசினர். தமிழகம் முழுவதும் பணி யாற்றி வரக்கூடிய தொண்டு நிறுவனங்களின் ஊழியர்களுக் காக தனியாக நலவாரியம் ஏற் படுத்தி அவர்களுக்கான வாழ்வா தாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழு வதும் உள்ள தொண்டு நிறு வனங்கள் ஆயிரம் கடிதங்கள் தமி ழக முதல்வருக்கு ஜனவரி முதல் வாரம் அனுப்ப முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாற்றுத்திறனாளிகள் ஆட்சியரகம் வர ரயிலை நிறுத்த கோரிக்கை
திண்டுக்கல், டிச.13- திண்டுக்கல் ஆட்சியர் அலுவல கத்திற்கு வருகை தரும் மாற்றுத்திறனாளி களின் வசதிக்காக தலைமை மின்வாரிய அலுவலகம் அருகில் 10 நிமிடம் ரயிலை நிறுத்திட வேண்டும் என்று வலியுறுத்தி தென்னக ரயில்வே மேலாளரிடம் மனுக் கொடுக்கப்பட்டது. இதுதொடர்பாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் நலச் சங்கம் சார்பில் ஒன்றிய நகர நிர்வாகிகள் டி.ஸ்டாலின், ஏ.ஸ்டா லின் ஆகியோர் தென்னக ரயில்வே பொது மேலாளர் திண்டுக்கல் வந்த போது மனுக் கொடுத்தனர். அந்த மனுவில், திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் முகாம் கூட்டங்களில் பங்கேற்க பழனி மார்க்கம் வழியாக செல்லும் ரயில்களை மாற்றுத்திற னாளிகள் வசதிக்காக மீனாட்சி நாயக் கன்பட்டி அருகேயுள்ள பாலம் அருகே 10 நிமிடம் நிறுத்திட ரயில்வே நிர்வாகம் முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண் டுள்ளனர். (ந.நி.)
ஆன்லைனில் அதிகம் சம்பாதிக்கலாம் என ஆசைகாட்டி ரூ.6.50 லட்சம் மோசடி
தேனி, டிச.13- தேனி மாவட்டத்தில் இரு வேறு சம்ப வங்களில் ஆன்லைன் மூலம் ஆசை வார்த்தை காட்டி ரூ.6.50 லட்சம் மோசடி செய்ததாக தேனி மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய் துள்ளனர். போடி அருகே அம்மாபட்டியைச் சேர்ந்த வர் அசோக்குமார் என்பவர் மனைவி சங்கீதா. இவர் ஆன்லைன் மூலம் வரு மானம் ஈட்டுவது குறித்து சமூக வலை தளங்களில் விபரங்களை தேடினார். அப் போது லிங்க் மூலம் வாட்ஸ்அப் தகவல் வந்துள்ளது. குறிப்பிட்ட பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். அதற்காக முன்பணம் செலுத்த வேண்டும். விற்ற பிறகு முன் தொகையும், கமிஷனும் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் பொருட்களின் விலை குறைவாக இருந்த தால் அவற்றை எளிதில் விற்றதுடன் அதற்கான தொகையையும் பெற்றுள்ளார். ஆனால், அடுத்தடுத்து அதிகமான தொகையுடன் பொருட்களை விற்க வலி யுறுத்தப்பட்டது. விற்றப் பிறகும் தொடர்ந்து அடுத்தடுத்த பொருட்களை விற்றால் மட்டுமே இதுவரை செலுத்திய முதலீடு, கமிஷன் கிடைக்கும் என்று தெரிவிக்கப் பட்டது. அந்த வகையில் ரூ.5.32 லட்சத்தை இழந்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் தேனி சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் செய்தார். இதே போல் கம்பம் பாரதியார் நகரைச் சேர்ந்த விஷ்ணு ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 50-ஐ இழந்துள்ளார். இருவர் புகாரின்பேரில் தேனி சைபர் கிரைம் ஆய்வாளர் ரெங்கநாயகி வழக் குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.