தூத்துக்குடியில் இன்று மின்தடை
தூத்துக்குடி, நவ.19- தூத்துக்குடியில் மாதாந்திரப் பராம ரிப்புப் பணிகள் காரணமாக நாளை (சனிக்கிழமை) நகரின் சில பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி நகர் மின் விநியோகம் செயற்பொறியாளர் அலு வலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடியில் உள்ள துணை மின் நிலையத்தில் இன்று (நவ.20) சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆண்டாள் தெரு, சத்திரம் ரோடு, போல்பேட்டை, 1ம்கேட், 2-ஆம்கேட், மட்டக்கடை, பீச் ரோடு, இனிகோ நகர், விஇ ரோடு, பாலவிநாயகர் கோவில் தெரு, டூவிபுரம், ஜெயராஜ் ரோடு, மீனாட்சிபுரம், தாமோதரநகர், எட்டைய புரம்ரோடு, தெப்பகுளம், சிவன்கோயில் தெரு, டபுள்யூஜிசி ரோடு, சந்தை ரோடு, ஜார்ஜ் ரோடு, சண்முகபுரம், ஸ்டேட் பாங்க் காலனி, இன்னாசியார் புரம், எழில்நகர், அழகேசபுரம், முத்து கிருஷ்ணாபுரம், திரவியபுரம், குறிஞ்சி நகர், அண்ணா நகர், விவிடி மெயின் ரோடு, போல்டன்புரம், சுப்பையா புரம், பாளை ரோடு, சிதம்பர நகர், பிரையண்ட் நகர், முத்தம்மாள் காலனி, கேடிசி நகர், ஹவுசிங் போர்டு காலனி மற்றும் அதை சுற்றியுள்ள புகதிகளில் நாளை காலை ஒன்பது மணி முதல் பிற்பகல் மூன்று மணி மணி வரை மின் நிறுத்தம் செய்யப் படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடங்குளம் இரண்டாவது அணு உலையில் பழுது 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
திருநெல்வேலி, நவ.19- திருநெல்வேலி மாவட்டம் கூடங் குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் செயல்பட்டு வருகிறது. இந்த இரு அணு உலைகளில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரம் திருநெல் வேலி நகரைஅடுத்துள்ள அபிஷேக பட்டி யில் உள்ள மத்திய மின் தொகுப்பில் இணைக்கப்பட்டு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது இந்த நிலை யில் வெள்ளிக்கிழமை காலை இரண்டா வது அணுஉலையில் உள்ள டர்பைன் எந்திரத்தில் திடீரென பழுது ஏற்பட்டது. இதையடுத்து அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு பழுதை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது இதனால் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது இது குறித்து கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது இரண்டா வது அணுஉலையில் ஏற்பட்ட தொழில் நுட்பக் கோளாறை சரி செய்யும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர் இன்னும் இரண்டு நாட்களில் பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் அங்கிருந்து உற்பத்தி தொடங்கப்படும் என்றனர் முதலாவது அணு உலையில் இருந்து வழக்கம்போல் 1000 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
மூன்று வேளாண் சட்டங்கள் வாபஸ்: நெல்லை, குமரியில் வெற்றி கொண்டாட்டம்
திருநெல்வேலி நவ 19- ஒன்றிய பாஜக அரசு சமீபத்தில் கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு தழுவிய அளவில் விவ சாயிகள் அமைப்புகள் இடதுசாரி இயக்கங்கள் தொடர்ந்து ஒரு ஆண்டாக போராடி வந்தது இந்நிலையில் வெள்ளிக்கிழமை மூன்று வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார், இந்த அறிவிப்பானது விவசாயிகளும் இடது சாரி கட்சிகளும் ஒருங்கிணைந்து போராடி யதன் விளைவாக ஏற்பட்ட வெற்றி எனவே அதை வரவேற்று நெல்லை வண்ணார்பேட்டை செல்லபாண்டியன் சிலை அருகில் சிஐடியு சார்பில் வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது இந்த வெற்றிக் கொண்டாட்டத்திற்கு சிஐடியூ நிர்வாகி ஜோதி தலைமை தாங்கினார், இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், சிஐடியு மாவட்ட தலைவர் செண்பகம் ,சிஐடியு நிர்வாகி கள் பெருமாள், பீர்முகம்மது ஷா, சரவண பெருமாள், காமராஜ், சிபிஎம் பாளையங்கோட்டை பகுதி செயலா ளர் துரை, ரவி சண்முகம் வாலிபர் சங்க கருனா உட்பட பலர் பங்கேற்ற னர். இதேபோல் தாழையூத்தில் நடை பெற்ற கொண்டாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மானூர் தாலுகா செயலாளர் எம்.சுடலைராஜ்,சிஐடியூ நிர்வாகிகள் ராஜ,ன் சக்திவேல், மற்றும் ராஜகோபால் சின்னதுரை சுடலைமுத்து உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.