நாகப்பட்டினம்/திருவாரூர், மே 23- தமிழ்நாடு அரசு வேளாண் துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தை தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். கிராமப் புறத்தில் இருக்கும் விவசாயப் பெரு மக்களுக்கு பல்வேறு விதத்தில் உத விடும் வகையில் வேளாண் சாதனங் கள், வேளாண் இடுபொருட்கள், மானியத் தில் கிடைக்கக் கூடிய வேளாண்மை கருவிகள், விதைகள், கன்றுகள், ஆழ்துளை கிணறுகளுடன் மின் மோட்டார்கள், பண உதவிகள் என இத்திட்டம் ரூ.227 கோடி செலவில் துவக்கி வைக்கப்பட்டது. விவசாய மக்களுக்கு பல்வேறு வகையில் பயனளிக்கக் கூடிய இத்திட் டம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் காணொலிக் காட்சியின் மூலம் துவக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கீழ்வே ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி பேசினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் அருண் தம்புராஜ், தமிழக மீன் வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி, மேம்பாட்டுக் கழகத் தலை வர் உ.மதிவாணன், நாகை நாடாளு மன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்ட னர். திருவாரூர் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி வட்டாரம் பெருந்தரக்குடி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன், திரு வாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் ஆகியோர் பய னாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சித் தலைவர் கோ.பாலசுப்ரமணி யன் முன்னிலை வகித்தார்.