சின்னாளப்பட்டி, ஜன.10- திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே பண்ணப்பட்டி ஊராட்சியில் 200-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 20 ஆண்டு களாக அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தராமல் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும், ஊராட்சி நிர்வாகமும் புறக்கணிப்ப தாக இம்மக்கள் புகார் தெரிவிக்கின் றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது : கடந்த ஆண்டு சாலை விரி வாக்கப் பணி நடைபெற்ற போது, வருவாய்த் துறையினர் முறையாக அளவீடு செய்யாமல் இப்பகுதியில் இருந்து சாக்கடை கால்வாய் வெளி யேறும் பாதையை அடைத்து விட்ட னர். இதனால் இப்பகுதி முழுவதும் சாக்கடை நீர் செல்வதற்கு வழி இல்லா மல் வீடுகளின் முன்பாகவே தேங்கி நிற்கிறது. மேலும் கடந்த இருபது வருடங்க ளுக்கு முன்பு கட்டிய தொகுப்பு வீடு களின் மேற்கூரை பெயர்ந்து விழும் நிலையில் உள்ளது. எந்த நேரமும் இடிந்து விழக்கூடிய ஆபத்தான நிலை யிலேயே தூங்கும் நிலையே உள்ளது என மக்கள் கவலையுடன் தெரிவித்த னர். தொகுப்பு வீடுகளை செப்பனிட பராமரிப்பு தொகை கூட ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் தர மறுப்பதாக வும், தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என வும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், முதலமைச்சரின் தனிப்பிரிவு உள் ளிட்ட முகமைகளுக்கு புகார் மனு அனுப்பியும் எந்த ஒரு நடவடிக்கை யும் எடுக்க அதிகாரிகள் முன்வர வில்லை. சாலை வசதி, சாக்கடை வசதி செய்து தரக்கோரி சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங் களை நடத்தியும் மாவட்ட நிர்வாகம் தங்களுக்கு வளர்ச்சிப் பணிகளை செய்து கொடுப்பதில் அக்கறை காட்டவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதி களும் செய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதுகுறித்து சிபிஎம் ரெட்டியார் சத்திரம் ஒன்றிய செயலாளர் கே.எஸ். சக்திவேல் கூறும்போது, ரெட்டி யார்சத்திரம் ஒன்றியம் மட்டுமல்லாது, திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பெண் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒரு சிலர்தான் அந்தந்த ஊராட்சி களில் இருக்கின்றனர். மற்ற ஊராட்சி களில் பெண் தலைவர்களின் உற வினர்கள் தான் தலைவர்களாக செயல் பட்டு வருகின்றனர். தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு இந்நிலையை மாற்றவேண்டும். மேலும் நிர்வாகம் தாமதப்படுத்தி னால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடும் என்றார். -ம.ஹரிஹரன்