districts

மதுரை முக்கிய செய்திகள்

ஆண்டிபட்டி மீனாட்சியம்மன்  கோயிலுக்கு சொந்தமான நிலம் மீட்பு 

தேனி, ஜூன் 6- ஆண்டிபட்டி மீனாட்சியம்மன் கோயிலுக்கு சொந்த மான ரூ.2.5 கோடி மதிப்பிலான நிலத்தை அதிகாரிகள் மீட்ட னர்.  தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் பாண்டிய மன்னர்  கள் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த மீனாட்சி சுந்த ரேஸ்வரர் கோயிலுக்கு ஆண்டிபட்டி வட்டம் ஆண்டி பட்டி பிட் 1 - வருவாய் கிராமத்தில் உள்ள புஞ்சை நிலம் புல  எண் 737 Aன்படி பரப்பளவு 4224 சதுர அடியில் (O.97ஏ|செ) உள்ள நிலம் திருக்கோயில் வசம் திங்களன்று கையகப்  படுத்தப்பட்டது.  இந்நிகழ்வில் உதவி ஆணையர் கலைவாணன் தலை மையில், தனி வட்டாட்சியர் (ஆலய நிலங்கள்) யசோதா  உள்ளிட்ட வருவாய்த்துறையினர், இந்து சமய அறநிலை யத்துறையினர் கையகப்படுத்தினர். இந்த நிலம் விரைவில் பொது ஏலம் மூலம் குத்தகைக்கு விடப்பட உள்ளது.

ஆண்டிபட்டியில் தனியார் மதுபானக் கூடங்களில் அரசு அதிகாரிகள் சோதனை

தேனி, ஜூன் 6- ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்  படும் தனியார் மதுபான கூடங்களில் அரசு அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கள்ளச்  சாராயம் குடித்து சிலர் பலியான நிலையில், இதுபோன்ற  சம்பவங்களை தடுக்கும் வகையில் தமிழக அரசு தீவிர  நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மேலும் அரசு  மற்றும் தனியார் மதுபான கடைகளில் போலி மதுபானங்  கள் விற்பனை குறித்து கண்காணிக்க தமிழக அரசு அனைத்து மாவட்ட நிர்வாகத்திற்கும் உத்தரவிட்டது.  இதனையடுத்து பெரியகுளம் வருவாய் கோட்டாட்சி யர் சிந்து, ஆண்டிப்பட்டி தாசில்தார் சுந்தர்லால் ஆகி யோர் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டாரங்களில் செயல்பட்ட தனியார் மதுபான கடைகளில் திடீர் சோதனை மேற்  கொண்டனர். அரசு கிட்டங்கியில் இருந்து கொண்டு வரப்பட்ட மதுபானங்களை தவிர வெளிமாநில மது பானங்கள் ஏதும் விற்பனை செய்யப்படுகிறதா? நிர்ண யிக்கப்பட்ட விலையில் விற்கப்படுகிறதா? என்பது குறித்து தனியார் மதுபான விற்பனையாளர்கள் மற்றும் நிர்வாகி களிடம் விசாரணை நடத்தினர்.

சாலைப்பணியாளர்கள்  ஆர்ப்பாட்டம் 

திண்டுக்கல், ஜுன் 6- சாலைப்பணியாளர்கள் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். தொழில் நுட்ப  கல்வித்திறன் பெறாத ஊழியர்களுக்குரிய ஊதிய மாற்றம்  ரூ.5200 முதல் ரூ.20,200 – தர ஊதியம் ரூ.1900 வழங்க  வேண்டும். ஊதியத்தில் 10 விழுக்காடு ஆபத்துப்படி  வழங்க வேண்டும். இறந்தவர்களுக்கு நெடுஞ்சாலைத் துறையே விரைந்து பணி வழங்க வேண்டும் என்று வலி யுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணி யாளர் சங்கம் சார்பாக கோரிக்கை முழக்க போராட்டம், தபால் இயக்கம் நடைபெற்றது. கோட்டப்பொறியாளர் அலுவலகம் முன்பாக நடை பெற்ற இந்த போராட்டத்தில் மாநில துணைத்தலைவர் டி.ராஜமாணிக்கம், கோட்டத்தலைவர் ஆர்.ராஜா, கோட்ட துணைத்தலைவர் எம்.சேகர், செயலாளர் எஸ்.சீனிவாசன்,  பொருளாளர் முருகேசன், அரசு ஊழியர் சங்க மாவட்டச்  செயலாளர் விவேகானந்தன் உள்ளிட்ட தோழமைச் சங்க நிர்வாகிகள் பேசினர்.

 

;