புதுக்கோட்டை, ஜன.1- மாநில அளவிலான மணிமேகலை விருது பெற்ற சுய உதவிக்குழுவினரை நேரில் அழைத்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பாராட்டினார். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவ னத்தின் சார்பில், வங்கிக் கடன் இணைப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வில், விராலிமலை ஒன்றியம், வடுகப்பட்டி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு மணி மேகலை விருது, கேடயம் மற்றும் ரூ.3 லட்சம் மதிப்பீட்டிலான காசோலைகளை யும், அரிமளம் ஒன்றியம், ஆயிங்குடி கிராம வறுமை ஒழிப்புச் சங்கத்திற்கு மணிமேகலை விருது, கேடயம் மற்றும் ரூ.1 லட்சம் மதிப்பீட் டிலான காசோலைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். அதனைத்தொடர்ந்து, விருது பெற்ற வர்களை சனிக்கிழமை நேரில் அழைத்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பாராட்டி னார். இந்நிகழ்வில், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, உதவித் திட்ட அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.