திருவட்டார், ஜுலை 13- கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் வட்டார அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கப் பேரவை கூட்டம் திருவட்டாரில் நடை பெற்றது. பிரான்சிஸ்காள் தலைமை வகித்தார். சங்கத்தின் மாநில துணைச்செயலாளர் உஷா பாசி, மாநிலக்குழு உறுப்பினர் லீமா றோஸ், பொறுப்பாளர் மேரி எஸ்தர் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். தவைவராக சாந்தி, செயலாளராக ஜெபக் கனி, பொருளாளராக குமாரி வாலண்டீனா உட்பட 13 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.