திருவில்லிபுத்தூர், ஜூன் 4- விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் கலச லிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 21 ஆவது பட்டமளிப்புவிழா கல்லூரி தலைவர் முனைவர் கே.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. 2018-21 பேட்ச் பல்கலை ரேங்க் பெற்ற 16 பேர் உட்பட 520 பேருக்கு பட்டங்களை வழங்கி கல்லூரி தலைவர் பேசினார்.கல்லூரி செயலாளர் டாக்டர் எஸ்.அறிவழகி ஸ்ரீதரன் பல்கலை ரேங்க் பெற்ற மாணவர்களுக்கு மெடல்களை வழங்கினார். விழா ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் எஸ்.கோபால கிருஷ்ணன் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர். விழாவில் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.