இராமநாதபுரம்,ஜூன்.03- இராமநாதபுரம் நகர் வடக்கு திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 99 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கழக பொறுப்பாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ வழங்கினார். நகர் கழக செயலாளரும் நகர் மன்ற துணைத்தலைவருமான பிரவீன் தங்கம் ஏற்பட்டில் அரண்மனை முன்பு இந்நிகழ்ச்சி நடைபெற்றது. 100 க்கும் மேற் பட்டவர்களுக்கு குக்கர்,அயன்பாக்ஸ்,அரிசி, அடுப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப் பட்டன. இந்த நிகழ்ச்சியில், ராமநாதபுரம் நகர் மன்ற தலைவர் கார்மேகம்,ஒன்றிய சேர்மன் பிரபாகரன்,தலைமை செயற்குழு உறுப்பி னர் குணசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.