districts

img

இடையகோட்டை கழிவுநீர் வாய்க்காலுக்கு மூடி அமைக்க வலியுறுத்தல்

ஒட்டன்சத்திரம், மே.7-  ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையகோட்டையில் திறந்த நிலையில் உள்ள கழிவுநீர் வாய்க்காலுக்கு மேல்  பகுதியில் மூடி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள  இடையக்கோட்டை பேருந்து நிலையத்தில் கிழக்கு பக்க மாக ஊராட்சி ஒன்றியம் சார்பில் கழிவுநீர் வாய்க்கால் கட்ப்பட்டுள்ளது. இந்த கழிவுநீர் வாய்க்கால் கட்டப்பட்டு பலநாட்கள் ஆன நிலையில் திறந்த நிலையில் உள்ளதால் வங்கி, ஏ.டி.எம், ஓட்டல், மளிகை கடை, மெடிக்கல் உள்ளிட்ட கடை களுக்கு செல்பவர்கள் வயதானவர்கள், சிறுவர்கள் திறந்த  நிலையில் உள்ள கழிவுநீர் வாய்க்காலை தாண்டி செல் லும்போது தவறி விழுந்து காயங்கள் ஏற்படுகிறது.  இரவு நேரங்களில் கழிவுநீர் வாய்க்காலை தாண்டிச் செல்ல சிரமங்கள் ஏற்படுகிறது. திண்டுக்கல மாவட்ட நிர்வாகம் உடன் தலையிட்டு கழிவுநீர் வாய்க்கால் மேல் பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் சிமெண்ட் மூடி அமைக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.