districts

டிச.30 இல் பழனி கோட்டாட்சியரகம் முற்றுகை

விவசாயத் தொழிலாளர் சங்க திண்டுக்கல் மாநாடு அறிவிப்பு

திண்டுக்கல், நவ.26- திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பஞ்சமி நில ஆக்கிரமிப்பா ளர்களை வெளியேற்ற வேண்டும். பஞ்சமி நிலங்களை தலித் மக்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்  என்று வலியுறுத்தி டிசம்பர் 30 ஆம் தேதி பழனி கோட்டாட்சியர் அலு வலகத்தை முற்றுகையிடுவது என்று விவசாயத் தொழிலாளர் சங்க திண்  டுக்கல் மாவட்ட மாநாடு அறி வித்துள்ளது.  அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் திண்டுக் கல் மாவட்ட 7 ஆவது மாநாடு ஒட்  டன்சத்திரத்தில் வியாழன், வெள் ளிக்கிழமைகளில் நடைபெற்றது. முன்னதாக வியாழனன்று பேரணி - பொதுக்கூட்டம் நடைபெற்றது.

வெள்ளியன்று நடைபெற்ற பிரதி நிதிகள் மாநாட்டின் கொடியை மாவட்டக்குழு உறுப்பினர் எம்.கே. சம்சுதீன் ஏற்றி வைத்தார். மாநாட்  டிற்கு மாவட்டத்தலைவர் பி. வசந்தாமணி தலைமை வகித்தார். வரவேற்புக்குழு தலைவர் டாக்டர்  என்.கருப்பணன் வரவேற்புரை யாற்றினார். மாவட்டத் துணைத் தலைவர் பி.முருகேசன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநிலப் பொருளாளர் எஸ்.சங்கர் துவக்க வுரையாற்றினார். மாவட்டச்செய லாளர் கே.அருள்செல்வன் அறிக்கை சமர்ப்பித்தார். சிஐடியு  மாவட்டச்செயலாளர் கே.பிரபா கரன், விவசாயிகள் சங்க மத்தியக்  குழு உறுப்பினர் ஆர்.சச்சிதானந் தம், மாவட்டத்தலைவர் என்.பெரு மாள், மாவட்டச்செயலாளர் எம்.ராமசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட் டத் தலைவராக பி.வசந்தாமணி, மாவட்டச் செயலாளராக கே. அருள்செல்வன், மாவட்டப் பொரு ளாளராக எம்.ரவிச்சந்திரன், துணைத் தலைவர்களாக டி.துரைச்சாமி. எம். பழனிச்சாமி, பி.நாகராஜன், துணைச்செயலாளர்களாக பி.முரு கேசன், ஜே.பி.முருகன், டி.முரு கேஷ்வரி ஆகியோர் தேர்ந்தெடுக் கப்பட்டனர். மாநில தலைவர் ஏ. லாசர் நிறைவுரையாற்றினார்.  விவசாயத் தொழிலாளர் களுக்கு தனித்துறை அமைக்கப் பட வேண்டும். விவசாயத் தொழி லாளர்கள், சிறு-குறு விவசாயிகள் சமூக பாதுகாப்பை உறுதி செய்ய அமைக்கப்பட்ட விவசாயத் தொழி லாளர் நலவாரியத்தை செயல்  படுத்த வேண்டும். மின் இணைப் பில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற அரசின் அறி விப்பை கைவிட வேண்டும் என்று  மாநாட்டில் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.        (ந.நி.)

;