districts

img

மாவட்டங்களில் முறைசாராத் தொழிலாளர்கள் போராட்டம்

மதுரை, ஜூலை 5-  அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரிய செயல்பாட்டை முறைப்படுத்த வேண்டும். ஒன்றிய மோடி அரசு நலவாரிய திட்டங்களுக்கு ரூ. 3 லட்சம் கோடி நிதியினை பட்ஜெட்டில் ஒதுக்கி சமூக பாதுகாப்பை உறு திப்படுத்த வேண்டும். பணியிடத்  தில் மரணமடைந்த தொழிலா ளர்களின் குடும்பத்திற்கு உதவி நிதி 2 வருடங்களாக வழங்க வில்லை. எனவே, குடும்ப உதவி  நிதி வழங்க வேண்டும். இயற்கை மரணமடைந்த தொழிலாளர் குடும்பத்திற்கு 3 மாதத்திற்குள் உதவி நிதியை வழங்க வேண்  டும். இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்சம் வழங்க வேண்டும். தமி ழக அரசு அறிவித்துள்ள வீட்டு வசதித் திட்டத்தை எளிமைப் படுத்தி தேவையில்லாத ஆவ ணங்களை கேட்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்  வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி சிஐடியு சார்பில் மாவட் டங்களில் செவ்வாயன்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.  மதுரை எல்லீஸ்நகர், நல வாரிய அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்டு மானத்தொழிலாளர் சங்க மாவட்  டச் செயலாளர் சி.சுப்பையா தலைமை வகித்தார். சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.தெய்வராஜ், புறநகர் மாவட் டச் செயலாளர் கே.அரவிந்தன், தலைவர் கண்ணன், சங்க புற நகர் மாவட்டச் செயலாளர் மணிக்  கிருஷ்ணன், மாநில பொருளா ளர் ஜே. லூர்துரூபி, சிஐடியு புற நகர் மாவட்ட பொருளாளர் கௌரி ஆகியோர் பேசினர். சிஐ டியு மாநகர் தலைவர் மா. கணே சன், கட்டுமான தொழிலாளர் சங்க  மாநகர் மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் 

திண்டுக்கல் ஆட்சியர் அலு வலகம் முன்பாக சிஐடியு சார்பாக முறைசாராத் தொழிலாளர்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிஐடியு மாவட்டத்தலைவர் கே. பிரபாகரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே.ஆர்.கணே  சன், மாவட்ட நிர்வாகிகள் பேசி னர்.

விருதுநகர் 

விருதுநகர் தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு நடை பெற்ற இப்போராட்டத்திற்கு சிஐ டியு - கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி.ராமர் தலைமை தாங்கினார். துவக்கி வைத்து சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் எம். திருமலை பேசினார். சிஐடியு  மாவட்டச் செயலாளர் பி.என். தேவா கண்டன உரையாற்றி னார். மேலும் இதில் உடலுழைப்பு தொழிலாளர் சங்க மாவட்ட  செயலாளர் ஆர்.பாலசுப்பிரமணி யன் சிஐடியு மாவட்ட நிர்வாகி கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

தேனி

தேனி தொழிலாளர் நல அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்  பாட்டத்திற்கு கட்டுமான தொழி லாளர் சங்க மாநிலக்குழு உறுப் பினர் பி.பிச்சைமணி தலைமை வகித்தார். சிஐடியு மாநில துணைத் தலைவர் ஆர்.எஸ்.செண்பகம் கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் சி.முருகன், மாவட்ட செயலாளர் எம்.ராமச்சந்திரன் மற்றும் பல்வேறு சங்க நிர்வாகி கள் உள்பட 500- க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டு முழக்க மிட்டனர்.

சிவகங்கை

சிவகங்கையில் சிஐடியு மாவட்  டத் தலைவர் வீரையா தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. சிஐடியு மாவட்ட செயலாளர் சேதுராமன் மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் பேசினர்.

இராமநாதபுரம்

இராமநாதபுரத்தில் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.ஏ. சந்  தானம் தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாநிலச் செயலாளர் எம்.மகா லட்சுமி சிறப்புரையாற்றினார். சிஐடியு மாவட்ட செயலாளர் எம். சிவாஜி, மாவட்டத் தலைவர் எம். அய்யாத்துரை, முறைசாரா சங்க  மாவட்ட செயலாளர் ஆர்.முத்து விஜயன் மற்றும் பல்வேறு சங்க  மாவட்ட நிர்வாகிகள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற னர்.
 


 

;