districts

மதுரை முக்கிய செய்திகள்

சாலை விபத்தில் நால்வர் பலி

ஒட்டன்சத்திரம், மே 30- கரூர் மாவட்டம் சீத்தம்பட்டியை சேர்ந்தவர்கள் ரத்தி னம் (வயது 59), சேகர் (35). இவா்கள் இருவரும் சீத்தம்பட்டி யில் இருந்து பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரி சனம் செய்யச் சென்றனர். பின்னர் அவர்கள் சாமிதரிசனம் செய்து விட்டு பழனி யில் இருந்து இரு சக்கர வாகனத்தில் சீத்தம்பட்டிக்கு வந்து கொண்டிருந்தனர். வாகனத்தை ரத்தினம் ஓட்டி னார். சேகர் பின்னால் அமர்ந்திருந்தார்.  திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள நடுப்பட்டியை சேர்ந்தவர் சுதாகர் (24). மில் தொழி லாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர் துரையன் (21). பெயிண்டர். இவர்கள் இருவரும் நடுப்பட்டியில் இருந்து  ஒட்டன்சத்திரத்துக்கு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.  ஒட்டன்சத்திரம்-வேடசந்தூர் சாலையில் கேதை யறும்பு அருகே கொல்லப்பட்டி என்ற இடத்தில் இரு இரு  சக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதியது. இந்த கோர  விபத்தில், தூக்கி வீசப்பட்ட நான்கு பேரும் சம்பவ  இடத்திலேயே பலியாயினர். ஒட்டன்சத்திரம் காவல்துறை யினர் விசாரித்தனர்.

செல்போன் கடையில் கொள்ளை

ஒட்டன்சத்திரம், மே 30-  திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள  இடையக்கோட்டை பேருந்து நிலையத்தில் சங்கிலித்துரை என்பவர் செல்போன் விற்பனை செய்யும் கடை வைத்  துள்ளார். இவரது கடையில் வைக்கப்பட்டிருந்த  30 செல்போன்கள் மற்றும் ஒரு லேப்டப் கொள்ளை  போனது. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். கொள்ளை குறித்து இடையக்கோட்டை காவல்துறை யில் செல்போன் கடை உரிமையாளர் சங்கிவித்துரை புகார்  செய்தார். காவல் ஆய்வாள முத்துலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கொடைரோடு அருகே கொலை

சின்னாளபட்டி, மே 29- திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள  மாவுத்தம்பட்டியை சேர்ந்தவர் சுந்தரேசன் (40). இவர்  தனது தாயுடன் வசித்து வந்த நிலையில் கடந்த 26-ஆம்  தேதி அதே பகுதியில் ஊரின் ஒதுக்குப்புறமுள்ள புளி யந்தோப்பில் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார். அம்மையநாயக்கனூர் காவல்துறையினர் வழக்  குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சுந்தரேசனை அவரது சகோதரர் முருகன் கொலை செய்  தது தெரியவந்தது. முருகனை கைது செய்த காவல்துறை யினர் அவரை நிலக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

புதிய வழித்தடத்தில்  பேருந்து இயக்கம்

சின்னாளபட்டி, மே 29- திண்டுக்கல் மாவட்டம் ஜம்புதுரைக்கோட்டை ஊராட்சியில் மே-1-ஆம் தேதி நடைபெற்ற கிராம சபைக்  கூட்டத்தில் மக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று திண்டுக்  கல் மக்களவை உறுப்பினர் வேலுச்சாமி மேற்கொண்ட முயற்சியால் சிலுக்குவார்பட்டியில் இருந்து கொடை ரோடு, கொழிஞ்சிப்பட்டி, ஜல்லிபட்டி, காமலாபுரம் வழி யாக புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து இயக்கப் படுகிறது. பேருந்து சேவையை மக்களவை உறுப்பினர் வேலுச்சாமி துவக்கி வைத்தார். நிகழ்வில் ஜம்பு துரைக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் பவுன்தாய், ஊராட்சி செயலர் சிவராமன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கு  இலவசப் பயிற்சி வகுப்பு 

தேனி, மே 29- நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு காலிப்பணி யிடங்களுக்கு நடைபெறும் போட்டித்தேர்வுகளுக்கு 90 நாட்கள் நடைபெறும் இலவச பயிற்சி வகுப்பை தேனி  மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா தொடங்கி வைத்தார். தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளா கத்தில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் வேலை வாய்ப்புத்துறையும் இணைந்து நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசுப்பணியாளர்கள் தேர்வு வாரியம், ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம், வங்கிப் பணியா ளர் தேர்வு வாரியம் மூலம் நடைபெறும் போட்டித்தேர்வு களை ஒருங்கிணைத்து மாணவர்களை வெற்றி பெற செய்வதற்காக 90 நாட்கள் இலவசப் பயிற்சி வகுப்பு நடை பெறுகிறது. இந்நிகழ்வில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் எ.நாராயணமூர்த்தி, திறன் மேம்பாட்டு அமைச்சரவை அலுவலர் எம்.ஏ.கீர்த்திநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். “இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் நபர்கள்  தேர்வுகளுக்கான வகுப்புகள் சிறந்த தனியார் அமைப்பு களின் வல்லுநர்களை வரவழைக்கப்பட்டு பயிற்சி வகுப்பு கள் நடத்தப்படும். பயிற்சியின் போது மாதிரித் தேர்வு கள் நடத்தப்படும். திங்கட்கிழமை முதல் தொடர்ச்சியாக 90 நாட்கள் வகுப்புகள் நடைபெறும்” என மாவட்ட ஆட்சி யர் தெரிவித்தார்.

மாட்டுவண்டிப் பந்தயம்

இராமநாதபுரம், மே 29- இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வடக்கு ஒன்றிய  திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் ஆறுமுகவேல் ஏற்  பாட்டில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70- ஆம் ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு மாட்டு வண்டிப் பந்தயம் நடை பெற்றது. பந்தயத்தை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் காதர்  கிராமத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்  துவக்கி வைத்தார். பந்தயத்தில் இராமநாதபுரம், தூத்துக்குடி, திரு நெல்வேலி, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 80-க்கு மேற்பட்ட மாடுகள் மற்றும் வீரர்கள் கலந்து கொண்டனர். இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற பந்தயத்தில் வெற்றி  பெற்ற காளைகள் மற்றும் வீரர்களுக்கு ரொக்கப் பணம்  மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் முருகவேல், முன்னாள் மாநில தீர்மா னக்குழு துணைத்தலைவர் சுப.த. திவாகரன், பூபதி, மணி,  ஜெயபால், குலாம், முஹைதீன், கோவிந்தராஜ், பெருநாழி  போஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

“பெண்கள் குறித்து பிற்போக்குப் பார்வை கொண்டவர் மோடி”

திண்டுக்கல், மே 29- பெண்களைப் பற்றிய பிற்போக்குத் தனமான பார்வை கொண்டவர் பிரதமர் மோடி என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி.  திங்களன்று வடமதுரையில் சிஐடியு  நடைப்பயண வரவேற்புப் பொதுக்கூட்டத் தில் அவர்  பேசியதாவது:-  பாஜக மதச்சார்பை விட்டுக்கொடுக் காத கட்சி மட்டுமல்ல, வர்ணாசிரமக் கொள்  கைகளையும் மனுஷ்மிருதி கோட்பாட்டை யும் பின்பற்றும் கட்சி. பழங்குடியின சமூ கத்தைச் சேர்ந்த திரௌபதி முர்முவை குடி யரசுத் தலைவராக நாடே ஏற்றுக்கொண் டுள்ளது.  ஆனால், புதிய நாடாளுமன்ற கட்ட டத் திறப்பு விழாவின் போது குடியரசுத் தலைவரை அந்த வளாகத்தில் எந்த இடத்தி லும் காணமுடியவில்லை. எத்தனையோ சாமியார்களை விழாவிற்கு அழைத்தி ருந்தார்கள். நாட்டின் குடியரசுத் தலை வரை ஒதுக்கி வைத்துவிட்டனர்.  காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவ ரான சோனியா காந்தியை ஒரு ஜெர்சி மாடு  என்று  பொதுக்கூட்டத்தில் கிண்டலும் கேலி யும் செய்தவர் பிரதமர் மோடி. அப்படிப்பட்ட வர் தான் இந்த நாட்டின் பிரதமர். பெண் கள் குறித்து பிற்போக்கான பார்வை அவ ருக்கு இருக்கிறது என்பதற்கு இதை விட வேறு சான்று அவசியமில்லை என்றார்.

மதுரை மாவட்டத்தில்  அதிகரிக்கும் நகை பறிப்பு

மதுரை, மே 29- மதுரை மாவட்டத்தில் நகை பறிப்பு சம்பவங்கள் தொடர்கிறது. கடந்த வெள்ளி, சனி. ஞாயிறு மூன்று தினங்களில் மூன்று பெண்கள் 16 பவுன் தங்க நகைகள் பறிகொடுத்து  காவல்நிலையத்திற்கும் வீட்டிற்கும் அலைந்து கொண்டிருக்கின்றனர். மதுரை காதக்கிணறு பகுதியைச் சேர்ந்த எம்.முரு கம்மாள் (33) இவர் செம்பியனேந்தலில் இரவு 7.20 மணி யளவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது மூன்று பேர்  அவரிடமிருந்து இருந்து மூன்று பவுன் தங்கச் செயினை யும், ரூ.5,500 பணத்தையும் கொள்ளையடித்துச் சென்ற னர்.  மதுரை சிக்கந்தர்சாவடி அருகேயுள்ள தினமணி நகரைச் சேர்ந்தவர் ஆர்.நிர்மலா (53). இவர் தனது  நண்பரின் வீட்டிற்குச் சென்றுவிட்டு திரும்பும்போது எட்டு  பவுன் செயினை சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு ஒரு வர் பறித்தார். அவர் சிவகங்கை மாவட்டம் திருப்பு வனத்தைச் சேர்ந்த ஜி.சஞ்சய்குமார். நகையைப் பறி கொடுத்தவரும் அருகிலிருந்தவர்களும் சஞ்சய்குமா ரைப் பிடித்து அலங்காநல்லூர் காவல் ஆய்வாளர் இரா. கீதாவிடம் ஒப்படைத்தனர். திருமங்கலம் தாலுகா சிந்துப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட , வாலாங்குளத்தைச் சேர்ந்தவர் பி.கனக ராஜ். இவர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது வீட்டினுள் புகுந்த அடையாளம் தெரி யாத நபர்கள் அவரது மனைவி அணிந்திருந்த ஐந்து பவுன் செயினைப் பறித்துச் சென்றனர்.

மாணவர் தற்கொலை

     திருநெல்வேலி ,மே 29- நெல்லை பேட்டையை அடுத்த திருப்பணிகரிசல்குளம் அருகே உள்ள வடுகம்பட்டி காலனி தெருவை சேர்ந்தவர் வனராஜ். லாரி ஒட்டுநர்.  இவரது மகன் அன்பு குமார் ( 17). இவர் நெல்லையில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். அவர் எப்போதும்  செல்போனில் பேசிக் கொண்டு இருந்துள்ளார். இதனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதில் மனமுடைந்த அவர் சனிக்கிழமை விஷம் குடித்து சிகிச்சை பலனின்றி திங்களன்று அன்பு குமார் இறந்தார்.

சட்டவிரோதமாக மணல் கொள்ளை

சின்னாளபட்டி, மே 30- திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கொடைரோட்டில் சுமார் 45 ஏக்கர் பரப்பளவில் 300 ஆண்டுகள் பழமையான அன்னசமுத்திரம் கண்மாய் உள்ளது. இந்தக் கண்மாய் அம்மையநாயக்கனூர் பேரூராட்சி மாலையகவுண்டன்பட்டி, சிலுக்குவார்பட்டி, குல்லக்குண்டு, நரியூத்து, பள்ளபட்டி ஆகிய ஐந்துக்கும் மேற்பட்ட ஊராட்சிப் பகுதிகளில் உள்ள கிராமங்களின் அடிப்படை நீராதாரமாக உள்ளது. விளை நிலங்களும் பயன்பெற்று வருகிறது.  இந்த நிலையில் விடுமுறை நாட்களைப் பயன்படுத்தி இரவு முதல் பகல்வரை ஜேசிபி மற்றும் கனரக இயந்திரம் மூலம் 20-க்கும் மேற்பட்ட லாரிகளில் அன்னசமுத்திரம் கண்மாய் மண் திருடப்பட்டு வந்தது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அளித்த புகாரை அடுத்து பேரூராட்சி அதிகாரிகள்-பணியாளர்கள் உடனடியாக கண்மாயில் மண் அள்ளிக்கொண்டிருந்த நான்கு ஜேசிபி, பத்து டிப்பர் லாரிகளைப் பிடித்து கண்டித்து வெளியேற்றினர்.  சட்டவிரோத மண் திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது மாவட்ட கனிமவளத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மின்னல் தாக்கி பட்டாசு ஆலையில் தீ

சிவகாசி, மே 29- சிவகாசி அருகே அனுப்பன்குளத்தில் சேவுகன்  என்பவருக்குச் சொந்தமான ஸ்ரீ வேல் பட்டாசு  ஆலை உள்ளது. ஞாயிற்றுக்கிழமை தொழிலா ளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு ஆலை மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், ஞாயிறன்று நள்ளி ரவில் அப்பகுதியில் இடி மின்னலுடன் லேசான மழை  பெய்தது. அப்போது, மின்னல், பட்டாசு ஆலையின் மீது  விழுந்ததில், அறை முழுவதும் தீப்பற்றி எரிந்தது. தக வலறிந்து வந்த சிவகாசி தீயணைப்பு மற்றும் மீட்புத்  துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். சிவகாசி கிழக்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 



 

;