districts

img

வண்ணாரப்பேட்டையில் உண்ணாவிரத போராட்டம் நிறைவு

திருநெல்வேலி ,மார்ச் 5 வண்ணார்பேட்டையில் சிஐடியு  அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சங்கத்தின் மாநிலம் தழுவிய 24 மணிநேர உண்ணா விரத போராட்டம் வெள்ளிக் கிழமை ஆரம்பித்து சனிக்கிழமை காலை முடிவடைந்தது 14 வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை யை  இறுதிப்படுத்த வேண்டும், வரவுக்கும் செல வுக்கும் உள்ள வித்தியாசத் தொ கையை பட்ஜெட்டில் வழங்க வேண்டும் ,2003 பின் பணியில் சேர்ந்த தொழிலாளர்களை பழைய பென்சன் திட்டத்தில் இணைத்திட வேண்டும்  போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை வண்ணார்பேட்டை தாமிரபரணி டெப்போ முன்பு சிஐடியு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சங்கம்  சார்பில் நடைபெற்ற உண்ணா விரத போராட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் டி.காமராஜ் தலைமை தாங்கினார்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் நிறைவு உரையாற்றி உண்ணா விரத போராட்டத்தை முடித்து வைத்தார், சிபிஎம் மாநில குழு  உறுப்பினர் கேஜி.பாஸ்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.