மதுரை அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவரின் பயன்பாட்டிற்கான வாகனம் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கொட்டாம்பட்டி, வாடிப்பட்டி, உசிலம்பட்டி செல்லம்பட்டி, சேடபட்டி. திருமங்கலம் மற்றும் கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியங்களின் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்களுக்கான வாகனங்களை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ்சேகர் வழங்கினார்.